Breaking News LIVE: ஹெலிகாப்டர் விபத்து : விளக்கம் கேட்கும் காவல்துறை..

Breaking News Tamil LIVE Updates: இன்றைய தினத்தின் முக்கியச் செய்திகள் உடனுக்குடன்...

முகேஷ் Last Updated: 12 Dec 2021 04:36 PM
ஹெலிகாப்டர் விபத்து : விளக்கம் கேட்கும் காவல்துறை

ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் உயர் அழுத்த மின் கம்பிகள் இருந்ததா என மின்வாரியத்திடம் கேட்டுள்ளது காவல்துறை

ஹெலிகாப்டர் விபத்து : விளக்கம் கேட்கும் காவல்துறை

ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் உயர் அழுத்த மின் கம்பிகள் இருந்ததா என மின்வாரியத்திடம் கேட்டுள்ளது காவல்துறை

ஹெலிகாப்டர் விபத்து : விளக்கம் கேட்கும் காவல்துறை

ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் உயர் அழுத்த மின் கம்பிகள் இருந்ததா என மின்வாரியத்திடம் கேட்டுள்ளது காவல்துறை

தனியார் பள்ளி ஆசிரியரின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது - ராமதாஸ்

கோவை கணபதியில் உள்ள தனியார் பள்ளியில் இறுக்கமான ஆடை அணிந்ததற்காக 11-ஆம் வகுப்பு மாணவனை இயற்பியல் ஆசிரியர் 20 நிமிடங்கள் தாக்கியதில் மாணவன் கடுமையான காயங்கள் மற்றும் வலியுடன்  அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆசிரியரின் செயல் கண்டிக்கத்தக்கது!


ஆசிரியர்கள் மாணவர்களிடம் கண்டிப்பு காட்ட வேண்டும், தவறு செய்தால் தண்டித்து நல்வழிப் படுத்த வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், இரு மாணவனை 20 நிமிடங்களுக்கு மேலாக ஆசிரியர்  தொடர்ந்து தாக்குவது மனிதத்தன்மையற்ற செயல். இதை அனுமதிக்கக் கூடாது!


காயமடைந்த மாணவருக்கு தரமான மருத்துவம் அளிக்கப்பட வேண்டும். தவறு செய்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர்களுக்கு கனிவுடன் நடந்து கொள்வது குறித்து உரிய பயிற்சிகளும், கலந்தாய்வுகளும் வழங்கப்பட வேண்டும்!

பெங்களூரில் தரையிறங்கியது ராணுவ வீரர் சாய் தேஜாவின் உடல்... வீரர்கள் ராணுவ மரியாதை...

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த சாய் தேஜாவின் உடலானது தற்போது பெங்களூர் விமானப்படைத் தளத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.அவரது உடலுக்கு ராணுவ வீரர்கள் மரியாதையை செலுத்தி வருகின்றனர். 

தமிழ்நாடு முதல்வருக்கு இந்திய விமானப்படை நன்றி

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் மீட்பு பணிகளுக்காக உதவிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இந்திய விமானப் படை நன்றி கூறியுள்ளது. 

திருச்சூர் கிளம்பிய ஆபிசர் பிரதீப்பின் உடல்... கேரள அதிகாரிகளிடம் ஒப்படைக்க முடிவு!

சூலூர் கொண்டுவரப்பட்ட  ஜூனியர் வாரண்ட் ஆபிசர் பிரதீப்பின் உடல் தற்போது அவரின் சொந்த ஊரான திருச்சூர் கொண்டு செல்லப்படுகிறது. அவரின் உடலை வாளையாரில் கேரள அதிகாரிகளிடம் ஒப்படைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சூலூர் வந்தது...ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஆபிசர் பிரதீப் உடல்!

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஜூனியர் வாரண்ட் ஆபிசர் பிரதீப்பின் உடல் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சூலூர் விமானப் படைத்தளத்திற்கு கொண்டு வரப்பட்டது. தற்போது, சாலை மார்க்கமாக அவரது சொந்த ஊரான திருச்சூர் கொண்டு செல்லப்பட இருக்கிறது. 


மாவட்ட நிர்வாகம் சார்பில் தெற்கு வருவாய் கோட்டாட்சியர் இளங்கோ, சூலூர் வட்டாட்சியர் சகுந்தலா மணி ஆகியோர் ஜூனியர் வாரண்ட் ஆபிசர் பிரதீப்பின் உடலை பெற உள்ளனர்.

IAS அதிகாரிகள் தங்கள் பெயரில் உள்ள அசையாத சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு..

IAS அதிகாரிகள் அனைவரும் தங்கள் பெயரிலும், தங்களுடைய குடும்பத்தினர் மற்றும் பிற நபர்கள் பெயரிலும் உள்ள தங்களுக்கு சொந்தமான அசையாத சொத்து விவரங்களை ஜனவரி 31 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவு 

Background

ஒமிக்ரான் வகை கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மும்பையில் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.