Breaking News LIVE: மும்பையில் மேலும் ஒருவருக்கு ஒமிக்ரான் கொரோனா தொற்று - மொத்த எண்ணிக்கை 4ஆக உயர்வு
Breaking News Tamil LIVE Updates: இன்றைய தினத்தின் முக்கியச் செய்திகள் உடனுக்குடன்...
அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்தது. இத்தேர்தலில் போட்டியிட பன்னீர்செல்வம், எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
கர்நாடகாவில் ஏற்கெனவே இருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் தற்போது பாதிப்பு 3 ஆக அதிகரித்துள்ளது
குஜராத்தில் ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளது
முன்னாள் தமிழக ஆளுநரும், ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் ரோசய்யா(88) காலமானார். வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஹைதராபாத்தில் இன்று காலை மரணமடைந்தார்.
கனமழை காரணமாக மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நாமக்கல், தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக மதுரை மாவட்டத்தில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
Background
பிரிட்டனில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், இது ஒமிக்ரான் நோய்த் தொற்று பாதிப்பா? என்பதை மரபணு வரிசை சோதனையில் தெரிய வரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, 'அபாயத்தில் உள்ள நாடுகள்' என அடையாளம் காணப்பட்ட 13 நாடுகளிலிருந்து சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய நான்கு விமான நிலையங்களுக்கு வருகைதரும் பயணிகளின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், பிரிட்டனில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த, இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 8 பேரில் ஒரு குழந்தை உட்பட 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, பயணிகள் எட்டு பேரும் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவ மேலாண்மை நெறிமுறையின்படி சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் மாதிரிகள் முழு மரபணு வரிசைப்படுத்தலுக்கு (ஜீனோம் சீக்வென்சிங்க்) அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வின் முடிவிலேயே ஒமிக்ரானா இல்லையா என்பதை முடிவு செய்ய முடியும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -