Breaking News LIVE Today: போராட்டத்திற்கு அனுமதி இல்லை - டெல்லியில் இருந்து தமிழ்நாடு திரும்பும் விவசாயிகள்
Breaking News LIVE Updates in Tamil: தமிழ்நாடு உள்பட இந்தியாவில் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளையும் ஏபிபி நாடு லைவ்ப்ளாக் மூலமாக விரைவுச்செய்திகளாக உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டெல்லியில் தடுத்து நிறுத்தப்பட்ட அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் ரயிலில் தமிழ்நாடு திரும்புகின்றனர். ஜந்தர் மந்தரில் போராட காவல்துறையினர் அனுமதி கொடுக்காததால் மாநிலத்திற்கு திரும்புகின்றனர்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி பதவியேற்றுக்கொண்டார். தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரிக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
உத்தரகாண்டில் ஒரே கட்டமாக 70 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது
கோவாவில் ஒரே கட்டமாக 40 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. இதேபோல், உத்தரப்பிரதேச சட்டமன்ற பொதுத்தேர்தலில் 2ஆம் கட்டமாக 55 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது.
Background
மேற்கு வங்கத்தின் சட்டப்பேரவையை ஒத்திவைப்பதாக அந்த மாநில ஆளுநர் நேற்று உத்தரவிட்டார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், மேற்கு வங்க மாநில ஆளுநரின் செயலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது மாநில உரிமைகளை காக்க தி.மு.க. எப்போதும் துணை நிற்கும் என்று மம்தா பானர்ஜிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவாதம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, அன்பான சகோதரி மம்தா பானர்ஜி என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்களால் அரசியலமைப்புச் சட்டமீறல்கள், வெட்கக்கேடான அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல் குறித்த தனது கவலையையும், வேதனையையும் பகிர்ந்து கொண்டார். எதிர்க்கட்சியில் உள்ள முதல்வர்கள் கூட்டத்தை நடத்துவது தொடர்பாகவும் அவர் பரிந்துரைத்தார்.
மாநில சுயாட்சியை நிலைநாட்ட தி.மு.க. துணை நிற்கும் என்று உறுதியளித்தேன். டெல்லியில் எதிர்க்கட்சி முதல்வர்களின் மாநாடு விரைவில் நடக்கவுள்ளது.”
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -