Breaking News LIVE Today: நீட் தேர்வு - முதலமைச்சரின் சவாலை ஏற்ற இபிஎஸ்..!
Breaking News LIVE Updates in Tamil: தமிழ்நாடு உள்பட இந்தியாவில் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளையும் ஏபிபி நாடு லைவ்ப்ளாக் மூலமாக விரைவுச்செய்திகளாக உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
நீதிபதி கலையரசன் விசாரணை ஆணைய அறிக்கையை சூரப்பாவுக்கு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. வேந்தராகிய ஆளுநருக்கு அனுப்பும் முன் அறிக்கையை சூரப்பாவுக்கு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் விவாதிக்க தயார் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார். முதலமைச்சர் அறிவிக்கும் பொதுவான ஒரு இடத்தில் விவாதம் செய்ய தயார் என இபிஎஸ் மதுரையில் பேச்சு
இந்தியாவில் ஒரே நாளில் 58,077 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. ஒரேநாளில் 1,50,407 பேர் தொற்றில் இருந்து குணமடைந்த நிலையில் 657 பேர் உயிரிழந்துள்ளனர்.
Background
சேலம் மாவட்டம் ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாழப்பாடி, தம்மம்பட்டி, வீரகனூர், ஏத்தாப்பூர் மற்றும் அயோத்தியாபட்டினம் பகுதிகளில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார்.
மக்களின் மத்தியில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, “திமுக ஆட்சியில் அமர்ந்து 9 மாத காலம் ஆகிறது. ஒன்பது மாத காலமும் இருண்ட காலமாக உள்ளது. மக்களுக்கு எந்த பயனும் இல்லை. தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையாக விளங்கும் தமிழ்நாடு காவல்துறை, ஏவல் துறையாக மாறக் கூடாது. திமுகவின் கைப்பாவையாக மாறினால், அதற்கான பலனை எதிர்காலத்தில் அனுபவிப்பீர்கள். கீழே இருக்கும் சக்கரம் சுழன்று கொண்டே இருக்கும். மேலே வரும் போது நிலைமை மாறும். முன்னாள் முதல்வர் பதவிக்காக ஆசைப்பட்டதில்லை. முதல்வராக இருந்தபோதும், முதல்வராக இல்லாத தற்போது நான் எப்பொழுதும் ஒரே மாதிரி தான் இருப்பேன். அடிமட்ட தொண்டனில் இருந்து முதல்வராகியவன் நான்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -