Breaking | குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நாளை மறுநாள் சந்திக்கவுள்ளார்
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய அரசியல், சமூக நிகழ்வுகளை உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
ஒலிம்பிக் போட்டிக்லைல் பதக்கங்களை பெறும்போது வீரர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் கட்டாயம் முக கவசங்களை அணிய வேண்டும் என்று ஒலிம்பிக் போட்டிகளுக்கான நிர்வாக குழு வலியுறுத்தியுள்ளது
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தான் புதிய வேளாண் சட்டத்தை கொண்டுவந்ததாக மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்
டோக்யோவில் ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் தங்கக் கூடிய ஒலிம்பிக் கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சரவையில் இணையமைச்சர் பொறுப்பை ஏற்றபிறகு முதன்முறையாக சென்னை வந்த எல்.முருகன், மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் தென்மண்டல தலைமை இயக்குனர் திரு. வெங்கடேஸ்வர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
"சமூக ஊடகங்களில் அதிநவீன தொழில்நுட்பமான வாட்ஸ் அப், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகியவற்றைப் பயன்படுத்தி மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டுள்ள 5 கிலோ இலவச அரிசி / கோதுமை திட்டத்தின் பயன்கள் குறித்த செய்தியினை மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும்.
நாட்டில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்கவும், மருத்துவக் கட்டமைப்புகளை மேம்படுத்தவும் மத்திய அரசு எடுத்து வரும் முயற்சிகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
மக்களின் விருப்பங்களை பிரதிபலிக்கும் வகையில் அகில இந்திய வானொலி மற்றும் பொதிகை செய்தி தொலைக்காட்சியும் தங்களது செய்திகளையும், நிகழ்ச்சிகளையும் ஒலி, ஒளிபரப்பு செய்திட வேண்டும்.
தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் புத்தக வெளியீட்டு பிரிவு தமிழ்நாட்டின் வரலாறு, பாராம்பரியம், மொழியின் தொன்மை குறித்த புத்தகங்கள் அதிக அளவில் வெளியிட வேண்டும்" என்று தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற போர் வன்முறைகளின்போது புகைப்பட நிபுணர் டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டதற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
Background
புகைப்படத்துறையில் மிக உயரிய புலிட்சர் விருது பெற்ற பிரபல புகைப்பட நிபுணர் டேனிஷ் சித்திக் நேற்று ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற வன்முறைகளின்போது கொல்லப்பட்டார். மறைந்த தனது மகனின் உடலை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வரவேண்டும் என சித்திக் -ன் தந்தை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்துள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -