Tamil News Headlines Today:
தமிழ்நாடு முழுவதும் மூன்றாவது மாபெரும் தடுப்பு மருந்து முகாம் இன்று நடைபெறுகிறது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி 33 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டத்தில், ஹைதராபாத் அணிக்கு ஆட்டத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.
PBKS vs SRH LIVE :ஜேசன் ஹோல்டர் போராட்டம் வீண்...! 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது பஞ்சாப்...!
சென்னையில் உள்ள 2 தனியார் சிண்டிகேட் நிதி குழுமங்களில் வருமான வரித்துறையினர் 23.09.2021 அன்று சோதனை நடத்தினர். சென்னையில் 35 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ரூ. 300 கோடிக்கும் அதிகமான கணக்கில் காட்டப்படாத வருவாய் கண்டறியப்பட்டுள்ளது. கணக்கில் வராத ரூ. 9 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு, இன்று மாலைக்குள் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரைகளை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, காற்றின் வேகம் மணிக்கு 75-85 கி.மீ-ல் இருந்து 95 கி.மீ வரை இருக்கும். மாநிலங்களின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். ஆந்திராவில் உள்ள ஸ்ரீகாகுளம், விஜயநகரம் மற்றும் விசாகப்பட்டினம் மற்றும் ஒடிசாவில் கஞ்சம் மற்றும் கஜபதி ஆகிய மாவட்டங்களை இது பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
கடந்த 24 மணி நேரத்தில் 29,616 பேர் புதிதாகத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இந்தியாவில் கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,01,442 ஆக உள்ளது. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் 0.90 சதவீதம் ஆகும்.
சுமார் 4.15 கோடி (4,15,40,690) கொரோனா தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் வசம் உள்ளன. மேலும் 94 லட்சம் (94,37,525) டோஸ் தடுப்பூசிகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஹரியானாவில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தும் வகையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் மனோகர்லால் கட்டார் கூறியுள்ளார்.
Staff Selection Commission தற்போது SSC Selection Posts Phase IX 2021 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கான பதிவு செப்டம்பர் 24 முதல் தொடங்குகிறது. 3261 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
SSC Selection Posts Phase IX 2021: மத்திய அரசு நடத்தும் தேர்வுகள்.. முழு விவரங்கள் இதோ!
சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத் தடுப்பு மற்றும் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடித்திடுமாறு அதிகாரிகளை முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.