இட ஒதுக்கீடு பெற ஏதுவாக மாற்றுப் பாலினத்தாரை ஓபிசி பட்டியலில் சேர்க்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  


கடந்த 2014ம் ஆண்டு, தேசிய சட்ட சேவைகள் மையம் தொடர்ந்த வழக்கில், இந்திய அரசியல் சாசனத்தின் மூன்றாவது பிரிவின் கீழ் மாற்றுப் பாலனத்தோரை மூன்றாம் பாலமாக அங்கீகரித்து அவர்களின் உரிமையை பாதுகாக்கும் நோக்கத்தில் மாற்றுப் பாலின சமூகத்தின் நலன்களுக்காக பல விதமான நடவடிக்கைகளை (இடஒதுக்கீடு உட்பட்ட) எடுக்க உச்சநீதிமன்றம் கட்டளையிட்டது. 



  


இந்த தீர்ப்பைத் தொடர்ந்து, தேசியப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் (என்சிபிசி)  இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஏற்கனவே உள்ள 27 சதவீத இட ஒதுக்கீட்டில் அனைத்து மாற்றுப் பாலினத்தவர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க பரிந்துரைத்தது. 


2016 மாற்றுப் பாலினந்தோர் [உரிமைகள் பாதுகாப்பு ] மசோதா முன்வரைவில், "பிறப்பால் பட்டியல், பழங்குடி வகுப்பைச் சேராத மாற்றுப் பாலினத்தவர்கள் அனைவரும் (முற்பட்ட, பொது வகுப்பினர் உட்பட)  பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக அறிவிக்கப்படலாம்.  ஓபிசி இடஒதுக்கீடு பெற உரிமை உண்டு" என்று பரிந்துரைத்தது.


இதற்கு, ஓபிசி பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, மத்திய அரசு இந்த முயற்சியைக் கைவிட்டது. இதைத் தொடர்ந்து,கடந்த 2019ல் இயற்றப்பட்ட மாற்றுப் பாலினத்தவர் (உரிமைகளைப் பாதுகாத்தல்) சட்டம் இயற்றப்பட்டது. 


மாற்றுப் பாலினந்தோர் [உரிமைகள் பாதுகாப்பு ] சட்டம்  2019 கீழ்காணும் தோக்கங்களை கொண்டுள்ளது.


ஒரு மாற்றுப் பாலினத்தோரை வரையறை செய்கிறது;மாற்றுப் பானத்தோருக்கு எதிரான வேறுபாட்டு வெறுப்புணர்வை தடை செய்கிறது; மாற்றுப் பாலினத்தோரையும் மற்றும் தான் உணர்ந்த பாலின் அடையாளத்தையும் அங்கீகரித்து அவர்களுக்கான உரிமையை வழங்குகிறது; வேலை வாய்ப்பு, ஆள் சேர்ப்பு, பதவி உயர்வு மற்றும் அது தொடர்புடைய விசயங்களில் அந்த துறைகளின் எந்த நிறுவனமும் மாற்றுப் பாலினத்தோருக்கு எதிரான வேறுபாட்டு வெறுப்புணர்வை தடை செய்கிறது. இருந்தாலும், மாற்றுப் பாலினத்தவருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படவில்லை.


இடஒதுக்கீடு முறைக்கு சாதி மற்றும் முக்கிய காரணிகள் அல்ல:  பட்டியல் கண்ட சாதியினருக்கும், பட்டியல் கண்ட பழங்குடியினருக்கும், இதர பிற்படுத்த வகுப்பினருக்கும் இந்தியாவில் இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. 





அரசியலமைப்பு பிரிவு 15(4)ன் மூலம், குடிமக்களில் சமுதாய நிலையிலும் கல்வி நிலையிலும் பின்தங்கிய வகுப்பினரே பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று பொருள் கொள்ளப்படுகிறது. இருப்பினும், அரசியலமைப்பு பிரிவு 16(4)ன் கீழ், அரசின் கீழுள்ள பணியிடங்களில் போதிய அளவிற்கு இடம் பெறவில்லை என அரசு கருதும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கலாம்  என்று தெரிவிக்கப்படுகிறது


மேலும், அரசியலமைப்பு பிரிவு 46, மக்களில் நலிந்த பிரிவினர், குறிப்பாக, பட்டியலில் கண்ட சாதியினர், பட்டியலில் கண்ட பழங்குடியினர் ஆகியோரின் கல்வி, பொருளியல் நலன்களை அரசு தனிப் பொறுப்புணர்வுடன் வளர்த்தல் வேண்டும் என்று கூறுகிறது. இந்த பிரிவின் கீழ் பார்த்தால், சாதியைத் தண்டி பெண்கள், திருநங்கைகள், கூலித் தொழிலாளர்கள் என பலரையும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களாக கருதி கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த 2014ம் ஆண்டு தனது தீர்ப்பில் தெரிவித்தது.   


நடைமுறை சிக்கல்: மாற்றுப் பாலினத்தவார் என்றால் யார்? என்ற கேள்விக்கு தேசிய சட்ட சேவைகள் மைய வழக்கில் உச்சநீதிமன்றம் தெளிவாக பதிலளிக்கவில்லை. 2019 மாற்றுப் பாலினத்தவர் சட்டத்தில் "மாற்றுப் பாலினத்தோரையும் மற்றும் தான் உணர்ந்த பாலின பாலின அடையாளத்தையும் அங்கீகரித்து அவர்களுக்கு உரிமையை வழங்க வேண்டும்" என்று தெரிவித்தது. இருந்தாலும், தங்களை மாற்றுப் பாலினத்தவர் என்று நிரூபிக்க மாநில சுகாதார அதிகாரியால் ஒப்புதல் அளிக்கப்பட்ட மாவட்ட நீதிபதியின் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டது. சான்றிதழ் கிடைக்கப்பெறாத எண்ணற்ற நபர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  மேலும், மாற்றுப் பாளினத்தவருக்கு சான்றிதழ் வழங்கும் நடைமுறையும்  மாநிலங்களுக்கு இடையே மாறுபடுகிறது. எனவே, இந்த நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டு மத்திய அரசின் உத்தரவு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும், வாசிக்க: 


Tamil Nadu Reservation Act: தமிழகத்தின் 69% இடஒதுக்கீட்டிற்கு பாதிப்பு ஏற்படுமா? விரிவான தரவுகளுடன் ABP நாடு ஸ்பெஷல்


Census 2021 : 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஓபிசி தகவல்கள் சேகரிக்கப்படாது - மத்திய அரச