தமிழ்நாடு:
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 114-வது பிறந்தநாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அமைந்துள்ள நினைவிடத்தில், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேற்று மரியாதை செலுத்தினார்.
தாய்த் தமிழ்நாட்டிற்கு “தமிழ்நாடு” எனப் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18ஆம் நாளை “தமிழ்நாடு நாள்” எனக் கொண்டாட அரசாணை விரைவில் வெளியிடப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார்.
இல்லம் தேடிக் கல்வி திட்டத்துக்கு சிறப்பு அதிகாரியாக இளம்பகவத் ஐஏஎஸ் நியமனம் செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை சார்பில் தொடங்கப்படும் இத்திட்டம் 1.70 லட்சம் தன்னார்வலர்களைக் கொண்டு இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
பொதுமக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டும் பல்வேறு அமைப்புகளிடமிருந்து வந்த கோரிக்கைகளைப் பரிசீலித்து தீபாவளி நாளன்று தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இறைச்சி கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
கோவிட்19 காரணமாக மூடப்பட்டிருந்த ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பள்ளிகள் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு நாளை திறக்கப்பட உள்ளது.
இந்தியா: ஜி-20 உச்சி மாநாடு இத்தாலி தலைநகர் ரோமில் நேற்று தொடங்கியது. இம்மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார்.
வாடிகன் நகரில் உள்ள அப்போஸ்தலிக் அரண்மனையின் சந்திப்பு அறையில் பிரதமர் நரேந்திர மோடியை போப் ஆண்டவர் பிரான்ஸிஸ் நேற்று வரவேற்றார்.
விளையாட்டு: டி20 உலக கிரிக்கெட் சூப்பர் 12 ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலேயே அணியை வென்றது. மற்றொரு ஆட்டத்தில், தென் ஆப்ரிக்கா அணி இலங்கை அணியை வென்றது.
இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் டி- 20 உலக கோப்பை ஆட்டம் இன்று நடைபெறுகிறது.