தமிழ்நாடு



  • அஇஅதிமுக பொதுச் செயலாளர் என்று கல்வெட்டு திறந்ததற்காக சசிகலா மீது அதிமுகவினர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். சசிகலாவின் இந்த செயல் சட்டத்திற்கு உட்பட்டது அல்ல என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தனது கருத்துகளை வெளியிட்டுள்ளார்.  

  • தமிழ்நாடு முழுவதும் கோவிட் தடுப்பூசி முகாம்களை ஞாயிற்றுக்கிழமைக்குப் பதிலாக சனிக்கிழமை நடத்துவது குறித்து பல்வேறு அலுவலர்களுடன் மாநில தலைமைச் செயலாளர் டாக்டர் இறையன்பு, காவல்துறை தலைவர் டாக்டர் சைலேந்திரபாபு ஆகியோர் ஆலோசனை நடத்தினர். 

  • தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம், மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,90,633 ஆக அதிகரித்துள்ளது. 14,058  பேர் தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.   

  • மதிமுக தலைமைக் கழக செயலாளராக வைகோவின் மகன் துரை வைகோ நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, நேற்று துரை வைகோவுக்கு கட்சியில் பொறுப்பு வழங்க ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பதிவான 106  வாக்குகளில் 104 வாக்குகள் துரை வைகோவுக்கு ஆதரவாக கிடைத்தது

  • வங்கக் கடல் மற்றும் தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் 26 அக்டோபர் முதல் வடகிழக்கு பருவக்காற்று (North East Monsoon) வீசுவதற்கான சாதகமான சூழல் நிலவுவதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது 

  • ஆளுநர் ஆ.என்.ரவியை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக அரசு ஜனநாயகத்திற்கு விரோதமான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக குற்றம் சாட்டியுள்ளார். 


இந்தியா: 



  • நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 41,36,142 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இத்துடன் நாட்டில் செலுத்தப்பட்ட மொத்தக் கொவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை, 99.12 கோடியைக் (99,12,82,283) கடந்தது.  மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் 10.78 (10,78,72,110) கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் இன்னமும் இருப்பில் உள்ளன. இன்று,  100வது  கோடி கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது. 

  • இந்தியாவுக்கு வருகை சர்வதேச பயனாளிகளுக்கான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது. அதன்படி, பயணத்தை எளிதாக்க தடுப்பூசி சான்றிதழ்களை பரஸ்பரம் அங்கீகரிது நாடுகளில் இருந்து வரும் பயனாளிகளுக்கு கட்டாய தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

  • போதைப்பொருள் வழக்கில் இம்மாத தொடக்கத்தில் கைது செய்யப்பட்ட நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானின் ஜானின் மனுவை மும்பை சிறப்பு நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது .


விளையாட்டு: 



  • நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை டி- 20 கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


கல்வி: 



  • இளங்கலை பொறியியல் மாணவர் சேர்க்கை துணை கலந்தாய்வுக்காக 9455 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கான ரேங்க் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.