Breaking News LIVE: பெண்கள் வீட்டில் இருந்தே பணிபுரியும் திட்டத்தை அறிவித்தார் ராஜஸ்தான் மாநில முதல்வர்

Breaking News LIVE Today Tamil, 21 Dec: தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய விவகாரங்களை கீழே லைவ் ப்ளாக்கில் அடுத்தடுத்து விரிவாக காணலாம்.

ABP NADU Last Updated: 23 Feb 2022 09:41 PM
பெண்கள் வீட்டில் இருந்தே பணிபுரியும் திட்டத்தை அறிவித்தார் ராஜஸ்தான் மாநில முதல்வர்

பெண்கள் வீட்டில் இருந்தே பணிபுரியும் திட்டத்தை அறிவித்தார் ராஜஸ்தான் மாநில முதல்வர். 20,000 பெண்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடயப்போவதாகவும், இத்திட்டத்திற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை - முதலமைச்சர் ஸ்டாலின்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 29 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை - முதலமைச்சர் ஸ்டாலின்

தமிழ்நாட்டில் இன்று 618 பேருக்கு உறுதியானது தொற்று பாதிப்பு; 4 பேர் உயிரிழப்பு...

தமிழ்நாட்டில் இன்று 618 பேருக்கு உறுதியானது தொற்று பாதிப்பு; 4 பேர் உயிரிழப்பு...

தமிழ்நாட்டில் 618 பேருக்கு கொரோனா பாதிப்பு; 4 பேர் உயிரிழப்பு..!

தமிழ்நாட்டில் 618 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதிப்பால் தமிழ்நாட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 

மகளிர் வார்டு ஒதுக்கீட்டிற்கு எதிரான மனு தள்ளுபடி

சென்னை மாநகராட்சி தேர்தலில் மகளிருக்கு வார்டு ஒதுக்கீடு செய்த உத்தரவை எதிர்த்து முத்துராஜ் என்பவர் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மகளிர் வார்டு ஒதுக்கீட்டிற்கு எதிரான மனு தள்ளுபடி

சென்னை மாநகராட்சி தேர்தலில் மகளிருக்கு வார்டு ஒதுக்கீடு செய்த உத்தரவை எதிர்த்து முத்துராஜ் என்பவர் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

10.5% உள் ஒதுக்கீடு : தீர்ப்பு ஒத்திவைப்பு

தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5% இட ஒதுக்கீட்டை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்திருந்தது. தமிழக அரசு அதை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தது. அனைத்து தரப்பு  வாதங்களையும் கேட்ட பின்பு  தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

மஹாராஷ்ட்ர அமைச்சர் நவாப் மாலிக் கைது

பிரபல நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் தொடர்பான பணமோசடி வழக்கில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவரும் மகாராஷ்டிரா அமைச்சருமான நவாப் மாலிக் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை அமலாக்கத்துறை கைது செய்து விசாரணை செய்ய உள்ளது. 


 

திமுக பிரமுகரை அரை நிர்வாணமக்கி தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மனு தள்ளுபடி

திமுக பிரமுகரை அரை நிர்வாணமக்கி தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மனு தள்ளுபடி

திட்டங்கள் நேரடியாக மக்களுக்குச் செல்கிறதா என பார்வையிடுவேன் - முதல்வர் ஸ்டாலின்

திட்டங்கள் நேரடியாக மக்களுக்குச் செல்கிறதா என பார்வையிடுவேன் - முதல்வர் ஸ்டாலின் 

தேர்தல் தோல்வி ஏன்? ; அதிமுக ஆலோசிக்கும் - ஓபிஎஸ்

நகர்ப்புற தேர்தல் முடிவுகள் தொடர்பாக கட்சித்தலைமை ஆலோசித்து முடிவெடுக்கும். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான வழக்குகளை அதிமுக சட்டப்படி எதிர்கொள்ளும் - ஓபிஎஸ்

தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கி கொள்ளப்படுகிறது- தேர்தல் ஆணையம் !

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது. அதன்பின்னர் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இந்நிலையில் தமிழ்நாட்டில் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிகள் விலக்கி கொள்ளப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்விற்கான அறிவிப்பாணை வெளியீடு !

டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்விற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. வரும் மார்ச் மாதம் 23ஆம் தேதி வரை இந்தத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வு வரும் மே மாதம் நடைபெற உள்ளது. 


 

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மார்ச் 9-ந் தேதி வரை நீதிமன்ற காவல்..!

தி.மு.க. நிர்வாகியை தாக்கியதாக கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று காலை இரண்டாவது வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு மார்ச் 9-ந் தேதி வரை நீதிமன்ற காவல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

எந்தப் பாடத்திட்டத்தை பின்பற்ற வேண்டும் என்பது மாநில அரசின் கொள்கை-உயர்நீதிமன்றம்

பள்ளியில் எந்தப் பாடத்திட்டத்தை பயன்படுத்த வேண்டும் என்பது மாநில அரசின் கொள்கை முடிவு என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

அலங்கார ஊர்திகள்- மேலும் ஒரு வாரம்

குடியரசுதின அணிவகுப்பில் பங்கேற்ற தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திகள் மேலும் ஒருவாரத்துக்கு மெரினா கடற்கரையில் காட்சிப்படுத்தப்படும் - முதல்வர் ஸ்டாலின்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனு- 11.30 மணிக்கு விசாரணை

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று காலை 11.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு  வர உள்ளது. 

தனி நீதிபதியின் உத்தரவு ரத்து

நடிகர் சங்கத்தின் தீர்ப்பு செல்லாது என  ஏற்கெனவே தனி நீதிபதி கல்யாணசுந்தரம் உத்தரவிட்டிருந்தார். தற்போது அந்த தீர்ப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது

நடிகர் சங்கத் தேர்தல் செல்லும்

2019ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தல் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீண்டும் கைது...!

தி.மு.க. பிரமுகரை தாக்கியதாக ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக இரண்டாவது வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். 

Background

உத்தரபிரதேசத்தில் ஏற்கனவே 3 கட்டங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற்ற நிலையில், இன்று 4ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று உத்தரபிரதேசத்தில் உள்ள 9 மாவட்டங்களில் உள்ள 59 சட்டசபை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 


இந்த 59 தொகுதிகளில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் தொகுதி அடங்கிய ரேபரேலி மாவட்டமும், நாட்டைய உலுக்கிய 4 விவசாயிகள் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட லக்கிம்பூர்கேரி மாவட்டமும் அடங்கும். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தம் 59 சட்டசபை தொகுதிகளில் நடைபெறும் இந்த வாக்குப்பதிவில் 624 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.








- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.