Headlines Today, 10 Oct: இன்றைய தினத்தின் காலையில் அறிய வேண்டிய பல்வேறு முக்கியச் செய்திகளை கீழே காணலாம்.


இந்தியா: 


1. உத்தரப்பிரதேச மாநிலத்தில் லக்கிம்பூர் எனுமிடத்தில் கருப்புக்கொடி காட்ட முயன்ற விவசாயிகளை கார் ஏற்றி கொலை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் நேற்று கைது செய்யப்பட்டார். 


2. இந்திய அஞ்சலக வங்கி கணக்கு திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட கணக்குகள் பெண்களால் தொடங்கப் பட்டுள்ளன என்றும் அவற்றில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட கணக்குகள் தொடர்ந்து செயல்பாட்டில் உள்ளதாகவும் அஞ்சல் துறை செயலாளர் வினித் பாண்டே தெரிவித்துள்ளார்


3. கோவிட்-19 நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி பணிகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியா, தமிழகம் உள்ளிட்ட 19 மாநிலங்களின் சுகாதாரத்துறை செயலாளர்களுடன் காணொலி வாயிலாக நேற்று  ஆலோசனை நடத்தினார். விரைவில் 100 கோடி டோஸ் என்ற இலக்கை எட்ட அனைத்து மாநில அரசுகளும் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்று மன்சுக் மண்டாவியா கேட்டுக் கொண்டார். 




தமிழ்நாடு: 


4. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கான்வாய்களை குறைக்கச்சொல்லி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் தனது கான்வாய் செல்லும்போது பொதுமக்களைத் தடுத்து நிறுத்தக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார்


5. தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் ஊராக உள்ளாட்சித் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் 73 சதவீத வாக்குகள் பதிவானதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


6. தமிழகத்தில் கோவிட்-19 மெகா தடுப்பூசி செலுத்தும் முகாம் இன்று நடைபெறுகிறது. 5-ஆவது கட்ட மாபெரும் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 30 ஆயிரம் இடங்களில் நடைபெறுகிறது. 


7. தமிழகத்தில், நீலகிரி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  


8. மாநிலம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,43,863 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 1,344 ஆக உள்ளது. சென்னையில் மேலும் 164 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 14 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.


விளையாட்டு:  


 






9. 2021 ஐபிஎல் சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று துபாயில் நடைபெறும் முதல் Play-off ஆட்டத்தில் சென்னை அணி – டெல்லி அணியுடன் மோதுகிறது