கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெற்ற முக்கிய அரசியல், சமூக நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே தெரிந்து கொள்ளலாம்.


*இந்திய தொல்லியல் துறை புதிய பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதில் கல்வெட்டு ஆய்வுக்கான புதிய பணியிடங்கள் இல்லை. 70 சதவிகிதத்துக்கும் மேல் கல்வெட்டுகள் திராவிட மொழிகளில் இருப்பதால் புறக்கணிக்கப்படுகிறதா என்ற ஐயம் எழுகிறது. எனவே ASI இம்முடிவினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்தார். 


*கோவிஷீல்டு தடுப்பூசிக்கு ரூபாய் 780, கோவாக்சின் தடுப்பூசிக்கு ரூபாய் 1,140, ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு ரூபாய் 1,145 ரூபாய் மட்டுமே தனியார் மருத்துவமனைகள் கட்டணமாக பெறலாம் என மத்திய அரசு தெரிவித்தது.  




 


*தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ், சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனத்திடமிருந்து 25 கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசியையும், பாரத் பயோடெக் நிறுவனத்திடமிருந்து 19 கோடி டோஸ் கோவேக்சின் தடுப்பூசியையும் பெறுவதற்கு மத்திய சுகாதார அமைச்சகம் ஆர்டர் செய்துள்ளது.


*கொரோனா பெருந்தொற்றால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில்கொண்டு, குறு சிறு நடுத்தரத் தொழில் நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் மற்றும் சிறு கடனாளர்கள் இரு காலாண்டுகளுக்கு கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்படவேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.     


சிறுகுறு தொழில் கடனைச் செலுத்த கால அவகாசம் : முதலமைச்சரின் கடிதம் சொல்வது என்ன?


*கொரோனாவுக்கு எதிரான 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டவர்கள் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்ய ஆர்டிபிசிஆர் பரிசோதனை தேவையில்லை என்று அறிவிக்கப்படலாம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் உள்ளூர் விமானத்தில் பறக்கலாம்!


*கொரோனா பாதிப்பால் உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பத்துக்கு உடனடியாக குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என மத்தியப் பணியாளர் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.


 



தமிழ்நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு  302 பேர் பலி 


 


*தமிழ்நாட்டில் பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் 500 படுக்கைகள் வசதிகளுடன் கூடிய பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையால் தென் சென்னை மக்கள் பயன்பெறுவார்கள் என்றும் தெரிவித்தார்.  


*10-ம் வகுப்பில் மாணவர்களுக்கு ஆல் பாஸ் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு பள்ளி அளவிலான நுழைவுத் தேர்வை கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது.


TN School Education : 11-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு! 


2017, 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை, புதுப்பிக்கத் தவறியவர்கள், மீண்டும் புதுப்பித்துக் கொள்ள ஏதுவாக வழங்கப்பட்டுள்ள சிறப்பு புதுப்பித்தல் சலுகையினை பயன்படுத்தி கொள்ளலாம் என மதுரை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அனிஷ் சேகர் தெரிவித்தார்.