தற்போது உள்ள ஊரடங்கு சில தளர்வுகளுடன், ஜூன் 21-ம்தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். கொரோனா நோய்த் தொற்று தினசரி பாதிப்பு அதிமுள்ள கோயம்பத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களைத் தவிர்த்து இதர 27 மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இந்த 27 மாவட்டங்களில், மதுபானக் கடைகள், சலூன்கள் மற்றும் அழகு நிலையங்கள், பழுதுநீக்கும் கடைகள், கட்டுமானப் பொருட்கள் கடைகள் உள்ளிட்டவை குறிப்பிட்ட நேரங்களில் செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
Tamil Nadu Corona Guidelines: 27 மாவட்டங்களில் தேநீர் கடைகள் திறக்க அனுமதி - முதல்வர் உத்தரவு
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 80,834 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. தொடர்ந்து 31-ஆவது நாளாக தினசரி புதிய பாதிப்புகளை விட, குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,32,062 பேர் குணமடைந்தனர். தேசியளவில் குணமடைபவர்களின் வீதம் 95.26 சதவீதமாக உயர்ந்துள்ளது.
PM Modi G7 Speech: சிறப்பான முறையில் மீண்டும் கட்டமைப்போம் : ஜி7 மாநாட்டில் பிரதமர் உரை..!
ஜி7 உச்சிமாநாட்டின் 2வது நாளான நேற்று, இரண்டு அமர்வுகளில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். பருவநிலை அமர்வில் பேசிய அவர், "பாரீஸ் ஒப்பந்த உறுதிகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் ஒரே ஜி-20 நாடு இந்தியா" என கூறினார். மேலும், இந்தியா மேற்கொண்ட பேரிடர் மீட்பு கட்டமைப்பு கூட்டணி (CDRI) மற்றும் சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டணி என்ற இரண்டு முக்கிய உலகளாவிய முயற்சிகளின் பயன்கள் அதிகரித்து வருவதையும் அவர் குறிப்பிட்டார்.
இஸ்ரேல் நாட்டின் புதிய பிரதமராக நஃப்தலி பென்னெட் தேர்ந்தெடுக்கப்பட்டார். நேற்று, நடைபெற்ற வாக்கெடுப்பில் பென்யமீன் நேதன்யாகு தோல்வியுற்றதை அடுத்து, நஃப்தலி பென்னெட்வை புதிய பிரதமராக அந்நாட்டு நாடாளுமன்றம் அறிவித்தது.
ஃப்ரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் சாம்பியன் பட்டத்தை, நோவக் ஜோகோவிச் வென்றார். கிரீஸ் வீரர் சிட்சிபாஸை 6-7, 2-6, 6-3, 6-2, 6-4 என்ற எண்ணிகையில் வீழ்த்தி பிரெஞ்சு ஓபன் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றார். நான்கு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளிலும் குறைந்தது இரு முறை சாம்பியன் பட்டம் வென்ற பெருமையை அவர் இதன்மூலம் பெற்றார்.
நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஒரு கோடியே 53 லட்சத்திற்கும் மேற்பட்ட கோவிட் தடுப்பு மருந்துகள் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
24 மாவட்டங்களுக்குப் புதிய ஆட்சியாளர்களை நியமித்து தமிழ்நாடு அரசு அறிவிக்கை வெளியிட்டது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக ஆல்பி ஜான் வர்கீஸ், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக கோபால சுந்தரராஜ், விருதுநகர் மாவட்ட புதிய ஆட்சியாளராக திரு மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
TN Collectors appointment : 24 மாவட்டங்களுக்குப் புதிய ஆட்சியாளர்கள் நியமனம்!