நேற்றைய ஜி 7 உச்சி மாநாட்டின் முதல் அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உயையாற்றினார். இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் அமெரிக்கா ஆகிய வளர்ந்த பொருளாதாரங்களைக் கொண்ட ஏழு நாடுகளின் கூட்டமைப்பே ஜி7 ஆகும். இந்த ஜி-ஏழு கூட்டமைப்பின் 47-வது உச்சி மாநாடு இங்கிலாந்தின் கார்ன்வாலில் நேற்று தொடங்கியது. இந்தாண்டு, உச்சி மாநாட்டில்  இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் அழைப்பை ஏற்று, உச்சி மாநாட்டின் அமர்வுகளில் ஜூன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் நேற்று பங்கேற்றார். இன்று நடக்கும், இரண்டு அமர்வுகளிலும்  பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். மேலும், ஆஸ்திரேலியா, கொரிய குடியரசு மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாட்டுத் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.         

Continues below advertisement

எதிர்கால பெருந்தொற்றுகளுக்கு எதிரான உறுதியை வலுப்படுத்தும் விதமாக, ‘சிறப்பான முறையில் மீண்டும் கட்டமைப்போம்’ (Build Back Better) என்ற தலைப்பில் அமர்வு நடைபெற்றது.         

Continues below advertisement

இந்தியாவின் சமீபத்திய கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் ஆதரவுக்கரம் நீட்டிய ஜி7  நாடுகளுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.  சமூகத்தின் அனைத்து மக்களையும் உள்ளடக்கிய  செயல்பாட்டின் மூலம் கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். திறந்த வெளிப்படைத்தன்மை மூலம் கட்டமைப்பைப் பயன்படுத்தி  தகவல் தொழில்நுட்ப  நுண்செயலி மூலம் தொடர்புத் தடமறிதல் மற்றும் தடுப்பூசி மேலாண்மையில் இந்தியா குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்திருப்பதாக தெரவித்த அவர், அனுபவத்தையும்  நிபுணத்துவத்தையும்  பிற வளரும் நாடுகளுடன் பகிர்ந்துக் கொள்ள இந்தியா விரும்புவதாகவும்  குறிப்பிட்டார்.  

உலகளாவிய சுகாதார நிர்வாக கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான கூட்டு முயற்சிகளுக்கு இந்தியாவின் ஆதரவையும் பிரதமர் உறுதிப்படுத்தினார். வளரும் நாடுகளுக்கு தடுப்பூசிகள் மற்றும் மருந்துகள் விரைவாகவும், மலிவு விலையில் கிடைப்பதை உறுதி செய்ய டிரிப்ஸ் ஒப்பந்த விதிமுறைகளில் தளர்வு தேவை என இந்தியா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளின் கோரிக்கைக்கு ஜி7 நாடுகள் ஆதரவு வழங்கவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.   

இந்த உச்சிமாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், இத்தாலி பிரதமர் மரியோ தராகி, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜப்பான் பிரதமர் யோஷிஹிட்டே சுகா, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான், ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் ஆகியோர் நேரில் பங்கேற்றுள்ளனர். உச்சி மாநாட்டின் இறுதி நாளான இன்றும்,  பிரதமர் மோடி இரண்டு அமர்வுகளில் கலந்து கொண்டு பேசவுள்ளார்.  முன்னதாக, கொரோனா தடுப்பூசிக்கு வர்த்தகம் தொடர்பான அறிவுசார் சொத்துரிமைகள் (டிரிப்ஸ்) தள்ளுபடிக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்தது.

குறைந்த செலவில் கொவிட் 19 தடுப்பூசிகள் மற்றும் அத்தியாவசிய மருந்து தயாரிப்புகள் உற்பத்தியை விரைவாக அதிகரிப்பதிலும், சரியான நேரத்தில் கிடைக்கச் செய்வதிலும், இந்த வர்த்தகம் தொடர்பான அறிவுசார் சொத்துரிமைகள் தள்ளுபடி ஒரு முக்கியமான நடவடிக்கை என மத்திய அரசு தெரிவித்தது.   

மற்ற செய்திகளுக்கு: 

IMDb Master Movie | இந்திய அளவில் முதலிடம் பிடித்த மாஸ்டர் ; கர்ணனுக்கு எந்த இடம்? 

Kumbh Mela Fake Covid 19 : கும்ப மேளாவில் கோவிட் பரிசோதனைகள் போலியானவை : சுகாதாரத்துறை தகவல்..!