News Today LIVE:காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
Latest News in Tamil Today LIVE: தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய சமூகம் மற்றும் அரசியல் நிகழ்வுகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 1745 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 27 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த இறப்பு எண்ணிக்கை 35427 ஆக அதிகரித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் ராம்பூரி உரி எல்லைப் பகுதியில் 3 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். பயங்கரவாதிகளிடமிருந்து 5 ஏகே 47 ரக துப்பாக்கிகள், 70 கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை தாம்பரம் ரயில் நிலைய வாயிலில் பட்டப்பகலில் கல்லூரி மாணவி ஸ்வேதா கத்தியால் குத்திக்கொல்லப்பட்டார். கத்திக்குத்தில் காயமடைந்த மாணவி குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாணவியை கொலை செய்த இளைஞர் ராமுவும் தனது கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
சென்னையில் இன்று தங்கம் கிராமிற்கு ரூபாய் 25 குறைந்து ரூபாய் 4 ஆயிரத்து 388க்கு விற்கப்படுகிறது. சவரன் தங்கம் 200 குறைந்து ரூபாய் 35 ஆயிரத்து 104க்கு விற்கப்படுகிறது
தமிழகத்தில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு, புதிய மின் இணைப்புக்கான உத்தரவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இன்று வழங்குகிறார்.
ஆன்மீக நகரமான திருவண்ணாமலைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதால், புதிய பேருந்து நிலையம் கட்டப்படும் என்று மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் . எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.
ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற உள்ளது. மனுக்களை திரும்பபெற நாளை மறுநாள் கடைசி நாளாகும்
சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று ஒரேநாளில், முகக்கவசம் அணியாமல் சென்ற 1,877-பேரிடம் இருந்து 3 லட்சத்து 75-ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக்கில் உரிய ரசீது வழங்காமல் கூடுதல் விலைக்கு வாடிக்கையாளர்களுக்கு மது விற்பனை செய்யும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு வாணிப கழக மேலாண்மை இயக்குநர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
மோடி அரசு தொடர்ந்து தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு அநீதி இழைத்து வருகிறது. சமூகம்,பொருளாதாரம் எனும் இரட்டை ஒடுக்குமுறைக்கு ஆளாகியுள்ளவர்களின் கட் ஆப் மார்க் எப்படி உயர்சாதியினரை விட அதிகமாக இருக்கமுடியும்?
பிறகெப்படி இந்த சமூகங்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்? இடஒதுக்கீடு என்பதே நூற்றாண்டுகளாக நடதுவரும் சமூக அநீதியை சரிசெய்ய ,வழங்கப்படும் சமூக நீதி.
சமூக நீதிக்கு எதிரான துரோகத்தை ஆர் எஸ் எஸ்/பாஜக மோடி அரசு செய்துவருகிறது.இது மன்னிக்க முடியாத துரோகம். இந்துக்கள் இந்துக்கள் என்று பேசும் ஆர் எஸ் எஸ்/ பிஜேபி எப்படி இந்துக்களில் பெரும்பான்மையாக உள்ளவர்களுக்கு துரோகம் செய்கிறது என்பதை நாம் உணரவேண்டும்.இந்து அரசியல் என்பது வெறும் ஏமாற்றுவேலை. இப்படியே போனால் பெரும்பானமை இந்துக்கள் வேலைவாய்ப்பில்லாமல் தெருவில் தான் நிற்கவேண்டும். பிஜேபியில் உள்ள பிறபடுத்தப்பட்ட,தலித் சமூகங்களைச் சேர்ந்த தலைவர்கள் தங்கள் பதவிக்காகவும்,சுயநலத்திற்காகவும் இந்த துரோகத்திற்கு துணை நிற்கிறார்கள்.
மோடி அரசின் இந்த துரோகச் செயலுக்கு தமிழக பிஜேபி தலைவர்களின் பதில் என்ன?
Background
Latest Breaking News in Tamil
கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 50,000 ரூபாய் உதவித்தொகை வழங்குமாறு தேசிய பேரிடர் மேலாண் ஆணையம் பரிந்துரைத்திருப்பதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -