News Today LIVE: 2024இல் சட்டமன்றத்துக்கு தேர்தல் வர வாய்ப்பு - எடப்பாடி பழனிசாமி

Latest News in Tamil Today LIVE: தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய சமூகம் மற்றும் அரசியல் நிகழ்வுகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.

ABP NADU Last Updated: 22 Sep 2021 06:45 PM
2024இல் சட்டமன்றத்துக்கு தேர்தல் வர வாய்ப்பு - எடப்பாடி பழனிசாமி

விரைவில் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்தல் வரும் என்றும், அனைவரும் தயாராக இருக்க வேண்டும் எனவும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி  கூறியுள்ளார்.

புதுச்சேரி மாநிலங்களவை தேர்தலில் பாஜகவை சேர்ந்த செல்வகணபதி போட்டியின்றி தேர்வு

புதுச்சேரி மாநிலங்களவை தேர்தலில் பாஜகவை சேர்ந்த செல்வகணபதி போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார். கடைசி நாளான இன்று அரசியல் கட்சியினர் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் போட்டியின்றி தேர்வாகிறார்.

கோவிந்தராசு கொலை வழக்கில் உயர்நீத் மன்றம் தீர்ப்ப நிறைவளிக்கிறது - ராமதாஸ் ட்வீட்

பண்ருட்டி மேல்மாம்பட்டு  பா.ம.க நிர்வாகி கோவிந்தராசுவின் உடற்கூறாய்வை புதுவை ஜிப்மர் மருத்துவர்களைக் கொண்டு முண்டியம்பாக்கம்  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது நிறைவளிக்கிறது.  உடலை எக்ஸ்ரே எடுக்க வேண்டும், உடற்கூறாய்வை காணொலி பதிவு செய்ய வேண்டும்,  மூன்றாவது தரப்பு மருத்துவர் ஒருவர் உடனிருக்க அனுமதிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருப்பதன் மூலம் இந்த வழக்கில் நீதி நிலைநாட்டப்படும் வாய்ப்புகள் உருவாகியுள்ளன.  நடந்தது கொலை தான் என்பதற்கான  குறிப்புகள் முதல் தகவல் அறிக்கையில் இருக்கும் நிலையில் கொலை வழக்கு பதிவு செய்யாமல், சந்தேக மரணம் என பதிவு செய்திருப்பது குறித்து நீதிபதி அவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதன்பிறகாவது கொலை வழக்காக மாற்றி எதிரிகள் கைது செய்யப்படுவரா? என்று ராமதாஸ் தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார் 

Flash News Tamil: திருப்பதி தரிசனம்: இலவச தரிசன டிக்கெட்டுகள் 25ஆம் தேதி காலை 9 முதல் ஆன்லைனில் வழங்கப்படும்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கான இலவச தரிசன டிக்கெட்டுகள் 25ஆம் தேதி காலை 9 முதல் ஆன்லைனில் வழங்கப்படும் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி அறிவித்துள்ளது. தரிசனத்திற்கு வரக்கூடிய பக்தர்கள் கட்டாயம் 2 டேஸ் தடுப்பூசி போட்டதற்கான  சான்றிதழ் அல்லது தரிசனம் செய்வதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு  கொரோனா நெகடிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதி செய்யப்பட உள்ளனர்.  அக்டோபர் மாதத்திற்கான ரூ 300 சிறப்பு நுழைவுத் தரிசன டிக்கெட்டுகள் செப்டம்பர் 24 காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

24-ஆம் தேதி குவாட் உச்சி மாநாடு நடைபெறுகிறது.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில், சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து குவாட் அமைப்பை ஏற்படுத்தியுள்ளன.இந்த அமைப்பின் உச்சி மாநாடு, அமெரிக்காவில் வருகிற 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது

பகிர்ந்தளிக்க முடியாத செஸ் வரியை குறைக்க வேண்டும் - பிடிஆர் மீண்டும் கோரிக்கை

பெட்ரோல் டீசல் மீதான வரியில் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க முடியாத செஸ் வரியை பல மடங்கு அதிகரித்துள்ள ஒன்றிய அரசு அத்தகைய போக்கை கைவிட்டால்தான் மாநிலங்கள் அவற்றை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவதை பரிசீலிக்க முடியுமென பெட்ரோல் டீசல் மீதான ஜிஎஸ்டி குறித்த கேள்விக்கு நிதியமைச்சர் பிடிஆர் பதிலளித்தார். 

Breaking News: எற்றுமதியில் ஏற்றம்- முன்னணியில் தமிழ்நாடு மாநாட்டை முதல்வர் தொடங்கிவைத்தார்

எற்றுமதியில் ஏற்றம்- முன்னணியில் தமிழ்நாடு என்ற மாநாட்டை முதல்வர் தொடங்கிவைத்தார்  


இந்த நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் ஊரகத் தொழில்கள் துறை அமைச்சர்  தா மோ அன்பரசன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள், தமிழக அரசின் தலைமை செயலாளர், கூடுதல் செயலாளர் வணிகம் மற்றும் தொழில்கள் அமைச்சகம் (இந்திய அரசு), முதன்மை செயலாளர் தொழில்கள் (தமிழ்நாடு அரசு), வெளிநாட்டு வர்த்தக கூடுதல் தலைமை இயக்குனர் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.

Breaking News: நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு அவகாசம் வழங்க ஆட்சேபனை இல்லை - மனுதாரர்

புதியதாக அமைக்கப்பட்ட செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், இராணிபேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத் தேர்தல்கள் மற்றும் 2019-ல் தேர்தல் நடத்தப்பட்ட 28 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 30.06.2021 வரை ஏற்பட்டுள்ள காலி பதவியிடங்களுக்கு தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்த  திட்டமிட்டுள்ளது. 


முன்னதாக, உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கு கூடுதல் அவகாசம் கோரி மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தை அணுகிறது. கடந்த செப்டம்பர் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்,  கூடுதல் அவகாசம் கோரியதற்கு  தனது அதிருப்தியையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தியது.  


இந்நிலையில், மனுதாரர் சங்கர்  தேர்தல் நடத்துவதற்கு கூடுதல் அவகாசம் அளிப்பதற்கு தனக்கு எந்த ஆட்சேபனை எதுவும் இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் பிராமணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். இதன்காரணமாக, நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு கூடுதல் அவகாசம் கிடைக்க வாய்ப்புளாக தெரிகிறது.   

Background

Latest Breaking News in Tamil 


தமிழகத்தின் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.