Pongal Celebration Live: பொங்கல் திருநாளான இன்று மஞ்சப்பையை பயன்படுத்த உறுதிமொழி எடுப்போம் - மு.க ஸ்டாலின்

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். இன்றைய தினத்தின் முக்கிய செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்

ABP NADU Last Updated: 14 Jan 2022 08:53 AM
இன்று நடக்கும் சபரிமலை மகரவிளக்கு பூஜை...! 8 இடங்களில் இருந்து பக்தர்கள் தரிசிக்க ஏற்பாடு..!

இன்று நடக்கும் சபரிமலை மகரவிளக்கு பூஜை...! 8 இடங்களில் இருந்து பக்தர்கள் தரிசிக்க ஏற்பாடு..!

பொங்கல் திருநாளான இன்று மஞ்சப்பையை பயன்படுத்த உறுதிமொழி எடுப்போம் - மு.க ஸ்டாலின்

திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து செய்தியில்,  


தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழர் திருநாள் - தமிழ் இனநாள் - பொங்கல் மகிழ்நாள் நல்வாழ்த்துகள்!  


 






கழக ஆட்சி மலர்ந்து கொண்டாடும் முதல் பொங்கல் திருநாளில் மேலும் மேலும் தமிழ்நாட்டை மேன்மையுறச் செய்யும் ஊக்கத்தைப் பெறுகிறேன். உங்கள் அன்பால் ஊக்கத்தை உழைப்பாய் மாற்றிடுவேன்.


இயற்கையோடு இயைந்து தமிழர்கள் நாம் கொண்டாடும் பொங்கல் திருநாளான இன்று, பிளாஸ்டிக் பைகளை இனிப் பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டு, மீண்டும்மஞ்சப்பை பயன்படுத்துவோம்!" என்று தெரிவித்துள்ளார்.  

அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் - கனிமொழி எம்.பி

கனிமொழி எம்.பி வாழ்த்துச் செய்தி


"அனைவருக்கும் என்னுடைய பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள். பொங்கல் திருவிழா என்பதையே இந்த மண்ணை, உழவை, விவசாயிகளை கொண்டாடக்கூடிய ஒரு திருவிழாவாக தான் நாம் வழிவழியாக போற்றிக் கொண்டாடி கொண்டிருக்கிறோம்.


அந்த மண்ணை சுற்றுப்புற சூழலை பாதுகாப்பதில் ஒரு முக்கிய அங்கமாக தான் முதலமைச்சர் மீண்டும் மஞ்சள் பை என்ற அந்த திட்டத்தை அறிவித்து வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார். பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து இந்த மண்ணை, சுற்றுப்புற சூழலை நம்முடைய எதிர்கால தலைமுறையை பாதுகாக்க கூடிய ஒரு மிகச்சிறந்த திட்டம் இந்த திட்டம்.


இந்த பொங்கல் திருவிழா என்பது சாதி மதங்களை கடந்து நாம் தமிழர்களாக கொண்டாடக்கூடிய ஒன்று. இந்த ஆண்டு அதை பாதுகாப்பாக கொண்டாடுவோம். மீண்டும் உங்கள் அத்தனை பேருக்கும் எனது பொங்கல் மற்றும் புத்தாண்டு  நல்வாழ்த்துக்கள்.’ என்று தெரிவித்துள்ளார்.

Background

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது வாழ்த்து செய்தியில், "தமிழர்களின் உள்ளங்களில் இனிமை பொங்கட்டும்! தமிழ்கூறும் நல்லுலகெங்கும் நன்மை விளையட்டும்! அனைவருக்கும் தை முதல் நாளாம், இனிய பொங்கல் - இன்பத் தமிழ்ப்புத்தாண்டு திருநாள் நல்வாழ்த்துகள்!" என்று கூறியுள்ளார்.   


உங்களில் ஒருவனான நான், உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சியில் அமர வைக்கப்பட்டுள்ளேன். பொறுப்பேற்ற நொடியில் இருந்து உங்களுக்காகவே ஒவ்வொரு நொடியையும் அர்ப்பணித்து வருகிறேன். எட்டே மாதத்தில் ஏற்றமிகு திட்டங்களைத் தீட்டி வருகிறேன். ஐந்தாண்டு செய்ய வேண்டிய சாதனைகளைச் சில மாதங்களில் செய்தவன் என்று நடுநிலையாளர்கள் பாராட்டைப் பெற்றும் வருகிறேன். இத்தகைய பொற்கால ஆட்சியின் முதல் தைத்திருநாளைத்தான் உங்களோடு சேர்ந்து நானும் கொண்டாட இருக்கிறேன். அனைவருக்கும் தமிழர் திருநாள், தமிழ் இனநாள், பொங்கல் மகிழ்நாள், உழவர் உயிர்நாள், திருவள்ளுவர் வாழ்வியல்நாள் நல்வாழ்த்துகள் என்றும் தெரிவித்துள்ளார்.  
 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.