Breaking Live: கொரோனா 3வது அலை வருவதற்கான சாத்தியம் அதிகரிப்பு - முதல்வர் ஸ்டாலின்
Latest News in Tamil Today LIVE: தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய சமூகம் மற்றும் அரசியல் நிகழ்வுகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 1639 பேருக்குக் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நான்காம் நாளாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும் ஒரே நாளில் 27 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,631 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மேலும் 174 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த, திருவிழாக்கள், அரசியல், சமூகம் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள தடை அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும், பொதுப் போக்குவரத்தினை அவசியத்திற்காக மட்டுமே பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பொதுமக்கள் பண்டிகைகளை தங்கள் இல்லங்களிலேயே கொண்டாட வேண்டும் என்றும், கூட்டம் கூடும் இடங்களுக்கோ, நிகழ்வுகளுக்கோ செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கொரோனா 3வது அலை வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளதாக மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் சிறப்புக் குழு அறிக்கை அளித்துள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் இன்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,587இல் இருந்து 1,596 ஆக அதிகரித்துள்ளது. ஒருநாள் தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில் சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் மேலும் 186 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 21 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,094 ஆக உயர்ந்துள்ளது.
பண்டிகைகளை வீட்டிலேயே கொண்டாடுங்கள்
கொரோனா வைரஸ்க்கு கூட்டம், கொண்டாட்டம் என்றால் மிகவும் பிடிக்கும். அதற்கு வாய்ப்பு கொடுக்கக்கூடாது. அதனால், பண்டிகைகள வீட்டிலேயே கொண்டாட வேண்டும் என்று நிதி ஆயோக் உறுப்பினார் வி.கே.பால் அறிவுறுத்தியுள்ளார்.
”எகிப்து – ஓமன் – இந்தோனேசியா – தாய்லாந்து – மலேசியா – வியட்நாம் ஆகிய நாடுகளில் தமிழர் தொடர்பான தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்” என்று முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.
யாதும் ஊரே யாவரும் கேளிர் என உலகிற்கு அறிவித்த தமிழரின் பண்பாட்டு அடையாளங்களைத்தேடி, உலகெங்கும் பயணம் செய்வோம். இந்திய துணைக் கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பட வேண்டும் என்றும் அறிவித்தார்.
டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.
தமிழரின் பண்பாட்டு அடையாளங்களைத் தேடி உலகெங்கும் பயணம் செய்வோம். ஆழ்கடலையும் கூட விடாமல் அகழ்வாய்வு செய்வோம் என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
கடந்த 24 மணி நேரத்தில் 43,263 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாடுமுழுவதும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 3,93,614 ஆக குறைந்துள்ளது. குணடைந்தோர் வீதம் தற்போது 97.48 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 40,567 பேர் குணமடைந்துள்ளதால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,23,04,618 ஆக அதிகரித்துள்ளது.
பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான 13-வது உச்சிமாநாடு பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக இன்று நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரேசில் அதிபர் Jair Bolsanaro, ரஷ்ய அதிபர் விளாடிமீர் புட்டின், சீன அதிபர் Xi Jingping , தென்னாப்பிரிக்க அதிபர் Cyril Ramaphosa ஆகியோர் கலந்து கொள்வதாக வெளியுறவு அமைச்சகத்தின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
முந்தைய அதிமுக ஆட்சியின்போது 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யலாம் என்று கூறப்படுகிறது.
கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக அனுமதி இல்லாமல் மணல் திருட்டு நடந்துவருவதை இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் அம்பலப்படுத்தியுள்ளது.
ஐம்பதாண்டுகளாகத் தமிழகத்தில் நிகழ்வதுதானே, இதில் என்ன ஆச்சர்யம்? இந்த மணல் கொள்ளை நடப்பது தலைமைச் செயலகத்திலிருந்து சுமார் 1 கிமீ தொலைவில் நாற்புறமும் அரசு அலுவலங்கள் உள்ள பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் சாலையின் வழியாக லாரி வாரியாக மணல் அள்ளப்பட்டு வந்துள்ளது. பொதுப்பணித்துறை சிறப்பான முறையில் வேடிக்கை பார்த்துள்ளது.
மிக மிக குறைந்தபட்ச மதிப்பு வைத்து கணக்கிட்டாலும் நாளொன்றுக்கு சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான மணல் ஏப்பம் விடப்பட்டுள்ளது. வருடத்திற்கு சுமார் 11 கோடி ரூபாய் அரசிற்கு வருவாய் இழப்பு,
இவையெல்லாவற்றையும் விட பெரும்கொடுமை என்னவென்றால், இந்த மணல் கட்டுமானத்திற்கு உகந்தது அல்ல. இம்மணலைக் கொண்டு கட்டடம் கட்டினால் நிச்சயம் இடிந்து விழுந்துவிடும் என்கிறார்கள் கட்டுமான நிபுணர்கள் அப்படியெனில், இந்த மணலை அள்ளி கட்டிடங்கள் கட்டிய மகானுபாவர்கள் யார்? அவற்றைப் பயன்படுத்தப் போவது யார்? அதில் வாழப் போகிற மக்களின் உயிருக்கு யார் பொறுப்பு?
கூவம் கடலுடன் இணையும் பகுதியில் மணல் அள்ளப்படுவதால் சூழியல் மிக மோசமாக அழிந்துவருகிறது என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ச்சியாக எச்சரித்து வருகிறார்கள்.
அனுமதி இல்லாமல் திருடுகிறார்களே என்று வருந்துவதா? அரசுக்கு வருவாய் இழப்பு என்று வருந்துவதா? அரசு இயந்திரம் உறங்கிக்கொண்டிருக்கிறதே என்று வருந்துவதா? ஆட்சி மாறினாலும் மணல் திருட்டு தொடர்கிறதே என வருந்துவதா? குழியல் சீரழிகிறதே என்று வருந்துவதா? மண்ணில்' கட்டப்படும். கட்டிடங்களால் ஏற்படப் போகும் உயிர்ப்பலிகளை எண்ணி வருந்துவதா?
என்று கமல்ஹாசன் வேதனை தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் நிலவரம் தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர்அஜித் தோவல், ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகர் நிகோலே பத்ருஷேவ்-வை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
Background
Latest News in Tamil Today LIVE Updates:
உடல் வெப்பநிலை அதிகமாக இருக்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை பள்ளியில் அனுமதிக்கக்கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -