Breaking News LIVE Today : 15-18 வயதினருக்கான தடுப்பூசி.. எச்சரிக்கை விதிகளை வெளியிட்டது மத்திய அரசு

Breaking News LIVE Today Tamil, 27 Dec: நாட்டில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் ஏபிபி நாடு லைவ் பளாக்கில் கீழே அறிந்து கொள்ளலாம்.

முகேஷ் Last Updated: 27 Dec 2021 07:10 PM
15-18 வயதினருக்கான தடுப்பூசி.. எச்சரிக்கை விதிகளை வெளியிட்டது மத்திய அரசு



கேரளாவில் டிசம்பர் 30 முதல் ஜனவரி 2-ஆம் தேதி இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் - கேரள அரசு

கேரளாவில் டிசம்பர் 30 முதல் ஜனவரி 2-ஆம் தேதி இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் - கேரள அரசு

சென்னை துறைமுகம் பெயரில் ரூ.45 கோடி மோடி - அமலாக்கத்துறை

சென்னை துறைமுகம் பெயரில் வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டு ரூ.45 கோடி மோடி - அமலாக்கத்துறை. இந்தியன் வங்கியின் முன்னாள் மேலாளர் சேர்மதி ராஜா வீட்டில் விசாரணை. சோதனையில் ஆவணங்கள், மதிப்புமிக்க சொத்துக்களின் ஆவணங்கள் பறிமுதல்  என சிபிஐ தகவல்.

சென்னை துறைமுகம் பெயரில் ரூபாய் 45 கோடி மோசடி

சென்னை துறைமுகத்தின் பெயரில் போலி வங்கிக்கணக்கு தொடங்கி ரூபாய் 45 கோடி வரை மோசடி நடைபெற்தை அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளது. இந்தியன் வங்கியின் முன்னாள் மேலாளர் சேர்மதி ராஜா வீட்டில் சி.பி.ஐ. விசாரணை நடத்திய நிலையில் இந்த மோசடி நடைபெற்றதை அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளது.

மாற்று வீடுகளுடன் தலா ரூ. 1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் : முதலமைச்சர் அறிவிப்பு

திருவொற்றியூரில் இடிந்த குடியிருப்புகளுக்கு பதிலாக மாற்று வீடுகவீடுகளுடன் தலா ரூ. 1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

குடியிருப்பு கட்டடம் இடிந்து விபத்து : மாற்று வீடுகள் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த இடிபாடுகளில் வீடுகள் இழந்தவர்களுக்கு உடனடியாக மாற்று வீடுகள் வழங்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். 


 





சிறுவர்களுக்கான தடுப்பூசி : ஜனவரி 1 ம் தேதி முதல் முன்பதிவு தொடக்கம்

தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதி உடைய சிறுவர்கள் ஜனவரி 1 ம் தேதி முதல் cowin இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் 15 - 18 வயதான சிறுவர்கள் ஜனவரி 3 ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று பிரதமர் மோடி அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Background

சென்னை திருவொற்றியூர் அரிவாக்குளத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்தது. ஏற்கனவே, விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில் அங்கு வசித்த மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். 


மக்கள் வெளியேறிய சிறிது நேரத்தில் கட்டடம் இடிந்து விழுந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும், இடிந்து விழுந்த கட்டடத்தில் யாரும் சிக்கி உள்ளார்களாக என்றும் தேடி வருகின்றனர். 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.