Breaking Live: கடந்த 24 மணி நேர நிலவரப்படி, 42, 618 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது

Latest News in Tamil Today LIVE: தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய சமூகம் மற்றும் அரசியல் நிகழ்வுகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.

ABP NADU Last Updated: 04 Sep 2021 01:33 PM
கடந்த 24 மணி நேர நிலவரப்படி, 42, 618 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது

நாடு முழுவதும், கடந்த 24 மணி நேர நிலவரப்படி, 42, 618 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதே சமயம், 36,385 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்று காரணமாக சிகிச்‍சை பலனின்றி 330 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது, நாடு முழுவதும் 4,05,681  பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரிலே, விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு தடை - அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரிலே, விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு தடை விதிக்கப்பட்டதாக அமைச்சர் சேகர்பாபு சட்டமன்றத்தில் விளக்கமளித்துள்ளார்.. 


நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதார செயலாளர், எதிர்வரும் பண்டிகை காலங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்கக் கூடும் என்று எச்சரித்தார். அனைத்து பொது சுகாதார நடவடிக்கைகளையும் பின்பற்றுமாறு வலியுறுத்தினார். ஓணம் பண்டிகைக்குப் பிறகு கேரள மாநிலத்தில் பாதிப்புகள் அதிகரித்து வருவதை அவர் சுட்டிக்காட்டினார். தற்போது,பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை வீழ்ச்சிகாரணமாக மனநிறைவு கொள்ளக் கூடாது எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்றும் தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளைத் தொடர வேண்டும் என்றும் கூறினார். 


முன்னதாக, வருகிற 15ம் தேதி வரை கொண்டாடப்படவுள்ள சமய விழாக்களின் கொண்டாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. தற்போதுள்ள கொரோனா பரவல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக பொது இடங்களில் சிலைகளை நிறுவுவது அல்லது பொது இடங்களில் சிலைகளை நிறுவுவது அல்லது பொது இடங்களில்  விழா கொண்டாடுவதற்கு அனுமதி மறுக்கப்படுவதாக தெரிவித்தது. அதுபோன்று, சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்வதற்கும், கரைப்பதற்கும் அனுமதி இல்லாத நிலையில், இச்சமய விழாக்களை பொது மக்கள் தங்கள் இல்லங்களிலேயே கொண்டாடுமாறு கேட்டுக் கொண்டது. 


இந்த அறிவிப்புக்கு தமிழக பாஜகவினர் பல்வேறு எதிர்ப்புகளை தெரிவித்தனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இதுகுறித்து பேசுகையில், " விநாயகரை கையிலெடுத்து அரசியல் செய்ய ஆரம்பித்தால், அதே விநாயகரே திமுக அரசை முடிவுக்கு கொண்டுவர கூட எழுவார்"என்று தெரிவித்தார்.

அங்கன்வாடி பணியாளர்களுடன் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி உரை

செப்டம்பர் மாதம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் ஊட்டச்சத்து மாதத்தின் ஒரு பகுதியாக நாடு முழுவதுமுள்ள அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களிடையே மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சர்  ஸ்மிரிதி இரானி நேற்று  உரையாற்றினார்.


போஷன் 2.0-ல் (POSHAN- 2.0) செயல்படுத்தக்கூடிய ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை வழங்குமாறு அவர்களை கேட்டுக்கொண்டார்

சென்னை மண்டல வாரியாக கொரோனா பரவல் விவரம்

Paralympics : துப்பாக்கி சுடும் போட்டியில் மனிஷ் நர்வால் தங்கப்பதக்கம் வென்றார்
துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவின் மனிஷ் நர்வால் தங்கப்பதக்கத்தையும், சிங்ராஜ் வெள்ளிப்பதக்கத்தையும் வென்றனர்.

பெங்களுருவில் செவிலியர் கல்லூரியில் 34 பேருக்கு கொரோனா தொற்று

பெங்களுருவில் செவிலியர் கல்லூரியில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அந்த கல்லூரியை தற்காலிகமாக மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடுவதற்கான சிறப்பு சட்டத்தை நிறைவேற்றக் கோரி போராட்டம்

ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடுவதற்கான சிறப்பு சட்டத்தை நடப்பு சட்டமன்றக்கூட்டத்தொடரில் நிறைவேற்றக்கோரும் கோரிக்கைக்கான போராட்டம் இன்று மாலை சென்னை ஆட்சியாளர் வளாகம் அருகில் நடைபெறுகிறது. ஸ்டெர்லைட் போராட்டத்தின் கோரிக்கைக்காக SDPI இந்த போராட்டத்தை ஒருங்கிணைக்கிறது.  

Rajendra Balaji Disproportionate assets : வருமானத்தை விட ராஜேந்திர பாலாஜி 73% அதிகம் சொத்து சேர்ப்பு

வருமானத்தை விட ராஜேந்திர பாலாஜி  73% அதிகம் சொத்து சேர்த்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.  

Background

Latest News in Tamil Today LIVE Updates: 


ஐந்து  வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான ‘கோர்பேவாக்ஸ்’ என்ற  கொரோனா தடுப்பூசியின்,  2 மருத்துவ பரிசோதனைகளுக்கு  இந்திய மருந்துகள் தலைமை கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ ) ஒப்புதல் அளித்துள்ளது.


தற்போது, பயாலஜிக்கல் இ நிறுவனம், வயது வந்தோருக்கு தயாரித்த கொரோனா தடுப்பூசியின்  3ம் கட்ட மருத்துவ பரிசோதனைக்கு டிசிஜிஐ ஒப்புதல் பெற்றுள்ளது.  மேலும், இந்நிறுவனம், 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பதின் வயதினருக்கு தயாரித்த ‘கோ்ரபேவாக்ஸ்’ என்ற தடுப்பூசியின் இரண்டாவது மற்றும் 3ம் கட்ட மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ள இந்த நிறுவனம், டிசிஜிஐ யின் ஒப்புதலை கடந்த 1ம் தேதி பெற்றது


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.