பள்ளி மாணவர்களுக்கு  இலவச காலை உணவு; ஏன் அவசியம்?


கல்வி கற்பதற்காக மாணவர்களை வரவைக்க, 1920-ல் நீதிக்கட்சியால் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தை 100 ஆண்டுகளுக்குப் பிறகு, இலவசக் காலை உணவு திட்டமாக விரிவுபடுத்தி உள்ளது மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு. படிப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, உணவுக்காகவது குழந்தைகள் பள்ளிக்கு வரட்டும் என்று கடும் நிதி நெருக்கடிக்கு இடையிலும் பள்ளிகளில் உணவு கொடுத்தார் படிக்காத மேதை காமராசர். மத்திய அரசின் உதவியுடன், கொடுக்கும் உணவை சத்தாக வழங்கினார் எம்ஜிஆர். எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் 1982ஆம் ஆண்டு கிராமப்புற பகுதிகளில் 2 முதல் 9 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு மட்டும் சத்துணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. அதே ஆண்டில் நகர்ப்புறப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. 1984 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.மேலும் வாசிக்க..


தொடர்ந்து நாட்டிற்கு பெருமை சேர்க்கும் காந்திகிராம கிராமிய நிகர்நிலை பல்கலை., பேராசிரியர்கள்


உலகின் சிறந்த முதல் இரண்டு சதவீத விஞ்ஞானிகளின் பட்டியலில் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நான்கு பேராசிரியர்கள் இடம் பிடித்துள்ளனர். 22 அறிவியல் துறைகள் மற்றும் 176 துணைத்துறைகளில் உலகின் சிறந்த விஞ்ஞானிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். வகைப்படுத்தப்பட்ட அனைத்து விஞ்ஞானிகளும் வெளியிட்ட குறைந்தபட்சம் ஐந்து ஆய்வுக் கட்டுரைகள், புலம் மற்றும் துணைப் புலம் சார்ந்த சதவீதங்களின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளனர். உலகில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முதல் விஞ்ஞானிகளின் பட்டியலை 2% அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தப் பேராசிரியர் ஜான் லொன்னிடிஸ் மற்றும் அவரது குழுவினர் வெளியிட்டுள்ளனர்.மேலும் வாசிக்க..


ஈ.சி.ஆர். பகுதியில் சாலை விபத்து  


மரக்காணம் அருகே மோட்டார் பைக் மீது அரசு பேருந்து மோதியதில் 2 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பேருந்து தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் இருந்து புதுவை நோக்கி சென்ற அரசு பேருந்து எதிர்பாராத விதமாக இவர்களது மோட்டார் பைக் மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார் பைக் பேருந்தின் முன் பக்கத்தில் சிக்கிக் கொண்டது. இதனால் சாலையில் சுமார் 20 மீட்டர் தூரத்திற்கு பேருந்தின் அடியிலேயே மோட்டார் பைக் இழுத்துச் செல்லப்பட்டது. இதுபோல் மோட்டார் பைக் சாலையில் உரசியதால் பைக் தீப்பற்றி எரிந்தது. இந்த தீ பேருந்தின் முன் பகுதியிலும் பரவியது.மேலும் வாசிக்க..


’நான் யாருன்னு தெரியுமா?’- கேள்விகேட்ட முதலமைச்சர் ஸ்டாலின்; சிரித்த மாணவி!


அப்போது அருகில் அமர்ந்திருந்த மாணவியிடம் விளையாட்டாய் பேச ஆரம்பித்தார். அவர், ’நான் யாருன்னு தெரியுமா?’ என்று கேள்வி எழுப்பினார். சிறுமி வெட்கப்பட்டுக் கொண்டே, ’நீங்க முதலமைச்சர்’ என்று கூறினார். ’முதலமைச்சர் சரி.. என் பேரு என்னன்னு தெரியுமா?’ என்று கேட்க, சிறுமி, ’ம்ம்.. சிஎம்’ என்று கூறினார். ’அது பதவி. பெயர் அல்ல. பெயர் தெரியுமா?’ என்று கேட்க, மாணவி வெட்கப்பட்டு சிரித்தார். முதல்வர் ஸ்டாலின் ’உனக்குத் தெரியுமா?’ என்று மாணவனை நோக்கித் திரும்பிக் கேட்டார்.  சிறுவன், ’தெரியும்... ஸ்டாலின்!’ என்று கூற, அவ்விடமே சிரிப்பலையால் மூழ்கியது. மேலும் வாசிக்க..


செந்தில் பாலாஜிக்கு மீண்டும் காவல் நீட்டிப்பு


செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்ட் 28ஆம் தேதி  வரை நீதிமன்ற காவலை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உச்சநீதிமன்றம் அவரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்திருந்தது.  இதனை அடுத்து, அமலாக்கத்துறை காவல் முடித்து, 12ம் தேதி செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டபோது, அவருடைய நீதிமன்ற காவல் 14 நாட்களுக்கு, அதாவது 25.8.2023 வரை நீட்டிக்கப்பட்டது. மேலும் வாசிக்க..


அரசுப் பள்ளியில் படித்த வீரமுத்துவேல் ஒரு எடுத்துக்காட்டு" - மாணவர்களுக்கு அட்வைஸ் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்!


அரசுப் பள்ளியில் படித்த சந்திரயான் 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் ஒரு எடுத்துக்காட்டு என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின். ”சந்திரயான் 3 நேற்று நிலவில் தரையிறங்கியதன் மூலமாக இந்திய நாட்டை உலகமே வியப்போடு திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. இந்த சாதனைக்கு பின்னால், சந்திரயான் 3 திட்ட இயக்குநராக இருப்பவர் விழுப்புரத்தைச் சேர்ந்த வீர முத்துவேல். அரசு பள்ளியில் படித்து இந்த சாதனை படைத்துள்ளார். இவரை போன்றோர்களை எடுத்துக்காட்டாக மாணவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். பல்வேறு துறைகளில் மாணவர்கள் சாதனை படைக்க வேண்டும். மாணவர்களின் கோரிக்கைகள் அனைத்து நிறைவேற்ற அரசு தயாராக இருக்கிறது. இது எனது அரசல்ல நமது அரசு” என்றார் முதலமைச்சர் ஸ்டாலின்.மேலும் வாசிக்க.