Uttarpradesh Accident: உத்தர பிரதேசத்தில் கால்வாயில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


டிராக்டர் கவிழ்ந்து விபத்து:


உத்தர பிரதேச மாநிலம் சஹான்பூர் மாவட்டத்தில் ரெதிபோட்கி என்ற் கிராமத்தில் இருந்து நேற்று 30க்கும் மேற்பட்டோர் ரண்டால் கிராமத்தில் நடைபெறும் கோயில் திருவிழாவுக்கு சென்றனர். டிராக்டரில் பெண்கள், ஆண்கள், சிறுவர்கள் என 30க்கும் மேற்பட்டோர் சென்றனர். அப்போது, தாஜ்புரா என்ற கிராமத்துக்கு அருகே சென்றுக் கொண்டிருந்தபோது, டிராக்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதனை அடுத்து, அங்குமிங்குமாய் டிராக்டர் ஓடி, சாலையோரத்தில் உள்ள கால்வாயில் கவிழ்ந்தது.  அந்த நேரத்தில் கால்வாயில் நீரோட்டம் அதிகமாக இருந்தது. இதனால் டிராக்டர் கவிழ்ந்ததில் அதில் இருந்தவர்கள் பலர் கால்வாயில் அடித்துச் செல்லப்பட்டனர். 


இதனை அறிந்த மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.  அங்கு சுமார் 10க்கும் மேற்பட்டவர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.  வீடிய வீடிய மீட்புப் பணிகள் நடந்து வந்த நிலையில்,  9 பேரின் உடல்களை மீட்டனர். இதன் மூலம் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் மாயமாகி உள்ளனர். அவர்களின் நிலைமை என்னவென்று தற்போது வரை தெரியவில்லை. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


9 பேர் உயிரிழப்பு:


இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டிராக்டரில் பயணித்த மக்கள் கால்வாய் இருக்கும் பகுதி வழியாக செல்ல வேண்டாம் என ஓட்டுநரிடம் கூறியதாகவும், அதனை அவர் கேட்காமல் அதே  வழியாக சென்றபோது விபத்து நேரிட்டதாக போலீசார் தெரிவித்தனர். 


இதற்கிடையில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் 9 பேரின் குடும்பங்களுக்கு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாத் இரங்கல் தெரிவித்ததோடு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார். கோயில்  திருவிழாவில் கலந்து கொள்வதற்காக சென்றவர்கள் கால்வாயில் மூழ்கி உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.




மேலும் படிக்க 


Vijayakanth: 71ஆவது பிறந்தநாள்... தரிசனம் கொடுத்த கேப்டன்... உற்சாகத்தில் துள்ளிக்குதித்த தொண்டர்கள்!