Lok Sabha Election 2024: பதிவான வாக்குப்பதிவு சதவீதத்தில் குழப்பம்? தேர்தல் ஆணையம் என்ன சொல்கிறது?


தமிழகத்தில் மக்களவை தேர்தல் நேற்று நடந்து முடிந்துள்ள நிலையில், முதலில் அறிவிக்கபட்ட பதிவான வாக்கு சதவீதத்தை விட பல தொகுதிகளில் பதிவான வாக்குகளின் சதவீதம் குறைந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. இந்நிலையில் மாயமான வாக்குகள் எங்கே சென்றது என்ற கேள்வி எழ தொடங்கியுள்ளது. மேலும் படிக்க


Vote Percentage : சென்னையில் ஏன் வாக்குப்பதிவு குறைந்தது? விளக்கம் சொன்ன ராதாகிருஷ்ணன்..


மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கான  வாக்குச்சாவடிகளில் இருந்து வரப்பெற்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் லயோலா கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கும் பணிகள் முடிந்து அந்த பகுதி சீல் வைக்கப்பட்டது. சென்னை லயோலா கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறையில் மத்திய சென்னை பாராளுமன்றத் தொகுதிக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கும் பணிகளையும், அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். தொடர்ந்து அந்த பாதுகாப்பு அறைக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் படிக்க


Weather Update: 12 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்த வெயில்.. அடுத்த சில நாட்களுக்கு இப்படிதான்..


தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று  முதல் 23 ஆம் தேதி வரை, மேற்கு    தொடர்ச்சி     மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய  மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  ஏனைய மாவட்டங்கள், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க


Mettur Dam: மேட்டூர் அணையின் இன்றைய நிலவரம்


தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 22 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 10 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 22 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும் படிக்க


அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வாட்டி வதைக்கும் வெயில் - கடும் அவதியில் கரூர் மக்கள்


தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் மதிய வேளையில் பொதுமக்கள் வெளியில் வரமுடியாமல் வீட்டில் முடங்கி உள்ளனர். வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்தவகையில் கரூரில் கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்து சூடுபிடிக்க ஆரம்பித்த வெயிலின் தாக்கம், சில நாட்களாக 100 டிகிரியை தாண்டி கொளுத்தி வருகிறது. மேலும் படிக்க