தமிழகத்தில் மக்களவை தேர்தல் நேற்று நடந்து முடிந்துள்ள நிலையில், முதலில் அறிவிக்கபட்ட பதிவான வாக்கு சதவீதத்தை விட பல தொகுதிகளில் பதிவான வாக்குகளின் சதவீதம் குறைந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. இந்நிலையில் மாயமான வாக்குகள் எங்கே சென்றது என்ற கேள்வி எழ தொடங்கியுள்ளது.


நாடாளுமன்ற தேர்தலின் முதல் கட்டதில் நேற்று நாடு முழுவதும் 102 மக்களவை தொகுதிகளில் தேர்தல் நடைப்பெற்றது. அதில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் நேற்று வாக்கு பதிவு நடைபெற்றது. இந்நிலையில் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் தேர்தல் ஆணையம் சார்பில் எத்தனை சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என்ற விவரங்கள் வழங்கபட்டு வந்தது. இந்நிலையில் தான் மாலை 7 மணி நிலவரப்படி தமிழகத்தில் பதிவான வாக்குகள் என்று தேர்தல் ஆணையம் கொடுத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததை விட பல மடங்கு வாக்கு சதவீதம் பல தொகுதிகளில் குறைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


குறிப்பாக மத்திய சென்னையில் நேற்று மாலை 7 மணி நிலவரப்படி 67.35 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது, ஆனால் அதன் பிறகு இறுதியாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள estimated turn out, அதாவது வாக்கு சதவீத மதிப்பீட்டில் மத்திய சென்னையில் 53.91 சதவீதம் மட்டுமே பதிவாகியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கிட்ட தட்ட 13.44 சதவீதம் வாக்கு சதவீதம் முதலில் சொன்னதை விட குறைந்துள்ளது.


அதே போல் தென் சென்னையில் 7 மணி நிலவரப்படி 67.82 சதவீதமும், அதன் பின் 54.27 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


இதே போன்று இன்னும் பல தொகுதிகளில் பதிவான வாக்குகளின் சதவீதம் குறைந்துள்ளது.


வட சென்னையில் 69.26 சதவீதமாக இருந்த வாக்கு 60.13 சதவீதமாக குறைந்துள்ளது,


கோவையில் 71.17 சதவீதமாக இருந்த வாக்கு 64.81 சதவீதமாக குறைந்துள்ளது


தூத்துக்குடியில் 70.93 சதவீதமாக இருந்த வாக்கு 59.96 சதவீதமாக குறைந்துள்ளது


திருநெல்வேலியில் 70.46 சதவீதமாக இருந்த வாக்கு 64.10 சதவீதமாக குறைந்துள்ளது


கன்னியாக்குமரியில் 70.15 சதவீதமாக இருந்த வாக்கு 65.46 சதவீதமாக குறைந்துள்ளது


ஸ்ரீபெரும்பத்தூரில் 69.79 சதவீதமாக இருந்த வாக்கு 60.21 சதவீதமாக குறைந்துள்ளது


மதுரையில் 68.98 சதவீதமாக இருந்த வாக்கு 61.92 சதவீதமாக குறைந்துள்ளது


திருச்சியில் 71.20 சதவீதமாக இருந்த வாக்கு 67.45 சதவீதமாக குறைந்துள்ளது


தென்காசியில் 71.06 சதவீதமாக இருந்த வாக்கு 67.55 சதவீதமாக குறைந்துள்ளது


சிவகங்கையில் 71.05 சதவீதமாக இருந்த வாக்கு 63.94 சதவீதமாக குறைந்துள்ளது


ராமநாதப்புரத்தில் 71.05 சதவீதமாக இருந்த வாக்கு 68.18 சதவீதமாக குறைந்துள்ளது


காஞ்சிப்புரத்தில் 72.99 சதவீதமாக இருந்த வாக்கு 71.55 சதவீதமாக குறைந்துள்ளது,


கிருஷ்ணகிரியில் 72.96 சதவீதமாக இருந்த வாக்கு 71.31 சதவீதமாக குறைந்துள்ளது


விருதுநகரில் 72.29 சதவீதமாக இருந்த வாக்கு 70.17 சதவீதமாக குறைந்துள்ளது


பொள்ளாச்சியில் 72.22 சதவீதமாக இருந்த வாக்கு 70.70 சதவீதமாக குறைந்துள்ளது


திருப்பூரில் 72.02 சதவீதமாக இருந்த வாக்கு 70.58 சதவீதமாக குறைந்துள்ளது


திருவள்ளூரில் 71.87 சதவீதமாக இருந்த வாக்கு 68.31 சதவீதமாக குறைந்துள்ளது


தேனியில் 71.74 சதவீதமாக இருந்த வாக்கு 69.87 சதவீதமாக குறைந்துள்ளது


மயிலாடுதுறையில் 71.45 சதவீதமாக இருந்த வாக்கு 70.06 சதவீதமாக குறைந்துள்ளது


ஈரோட்டில் 71.42 சதவீதமாக இருந்த வாக்கு 70.54 சதவீதமாக குறைந்துள்ளது


தமிழ்நாட்டில் பதிவான மொத்த வாக்கு சதவீதமும் நேற்று 7 மணி அளவில் 72.09 சதவீதம் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது 69.46 ஆக குறைந்துள்ளது. இந்நிலையில் வாக்கு சதவீதத்தை கணக்கிடுவதில் குளறுப்பிடி நடந்துள்ளதா என்ற கேள்வியை பலர் முன்வைக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் இன்று மத்தியம் அதிகாரப்பூர்வமாக மீண்டும் பதிவான மொத்த வாக்குகளின் சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிடும், அதில் தான் பதிவான வாக்குகளின் இறுதி சதவீதம் தெரியவரும் என தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.