கரூர் மாவட்டம் க.பரமத்தி பகுதியில் வெயில் தாக்கம் 106.7 டிகிரியாக பதிவானது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்தனர்.


 


 




 


தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் மதிய வேளையில் பொதுமக்கள் வெளியில் வரமுடியாமல் வீட்டில் முடங்கி உள்ளனர். வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்தவகையில் கரூரில் கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்து சூடுபிடிக்க ஆரம்பித்த வெயிலின் தாக்கம், சில நாட்களாக 100 டிகிரியை தாண்டி கொளுத்தி வருகிறது.


 


 




பகல் நேரத்தில் வெளியில் பொதுமக்கள் செல்லமுடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் வெப்பத்தின் அளவு அதிகரித்து கடுமையாக இருந்தது.


 


 




 


சாலைகளில் கானல்நீர் தெரிந்தது. வெயிலில் இருந்து தற்காத்து கொள்ள பொதுமக்கள் சாலைகளில் குடைபிடித்தப்படி சென்றனர். தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களில் சென்றவர்கள் முகத்தை துணியால் சுற்றி கொண்டு சென்றனர்.  மேலும் கடுமையான வெப்பத்தை தாங்க முடியாமல் பொதுமக்கள் வியர்வையில் நனைந்தனர். கரூர் மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் வெயிலின் தாக்கம் வருவதற்கு முன்பே வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது.