மக்களவை உறுப்பினரும் என்.சி.பி. (Nationalist Congress Party) கட்சியைச் சேர்ந்தவருமான சுப்ரியா சுலே-வின் புடவையில் தீப்பற்றிய வீடியோ பலரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


வீடியோ வைரல்: 


சுப்ரியா சுலேவின் புடவையில் தீப்பற்றி எரிவது போன்ற வீடியோ டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. பலரும் அவரின் நலன் குறித்து கமெண்ட் செய்து வருகின்றனர். 


என்ன நடந்தது? 


 மகாராஷ்டிட்ராவில் உள்ள புனே நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சுப்ரியா சுலே சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அங்கு குத்துவிளக்கை ஏற்றி சிவாஜி மன்னரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தார். அப்போது, எதிர்பாரா விதமாக, மேசையில் வைக்கப்பட்டிருந்த குத்து விளக்கில் அவரது புடவை பட்டு தீப்பற்றியது. உடனே இதனை கவனித்த சுப்ரியா சுலே சுதாரித்துக்கொண்டு, அருகில் இருந்தவர்கள் உதவியுடன் தீயை அணைத்தார். 







சுப்ரியா சுலே விளக்கம்: 


இது சம்பவம் தொடர்பாக சுப்ரியா சுலே வெளியிட்டுள்ள அறிக்கையில், தான் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். 


”நான் ஹிஞ்ச்வாடி பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கராத்தே போட்டியை துவக்கி வைக்க சிறப்பு விருந்தினராக சென்றிருந்தேன். அருகில் விளக்கு உள்ளதை கவனிக்காமல் இருந்துவிட்டேன். வேறொன்றுமில்லை. நான் நலமுடன் இருக்கிறேன். உங்கள் அன்பிற்கு நன்றி. யாரும் கவலையடைய வேண்டாம்.” என்று தெரிவித்துள்ளார். 




இதையும் படிங்க..


kohli records: ஒரே போட்டியில் எண்ணற்ற சாதனைகளை முறியடித்து அசத்திய விராட் கோலி! பட்டியல் இதோ!


பெண்களின் உரிமைகள் எங்களுக்கு முக்கியமல்ல... தலிபான் செய்தித் தொடர்பாளர் அட்டூழியம்