கர்நாடகா மாநிலம், பெல்காம் பகுதியில் விசித்திரமான பலூன் ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எலக்ட்ரானிக் சாதனத்துடன் விசித்திர பலூன்
கர்நாடக மாநிலம், பெலகாவி மாவட்டம், கடிகர வினகோப்பா எனும் கிராமத்தில், வயல்வெளியில் இந்த விசித்திரமான பலூன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த பலூனுக்குள் எலக்ட்ரானிக் சாதனமும், பேட்டரியும் அமைந்துள்ள நிலையில், அமெரிக்காவில் தென்பட்ட சீன பலூன்களை இந்த பலூன்கள் ஒத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பலூனின் படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றிய நிலையில்,தொடர்ந்து அங்கு விரைந்த காவல் துறையினர் பலூன் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட மின்னணு சாதனத்தை விசாரணைக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.
அமெரிக்காவில் பறந்த உளவு பலூன்
இதேபோல் சென்ற மாதம் அமெரிக்காவின் அணு ஆயுத ஏவு தளத்திற்கு மேல் சீனாவின் உளவு பலூன் ஒன்று பறந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஆண்டனி பிளின்கன் சீன தலைநகர் பீஜிங்குக்கு செல்வதற்கு ஒரு நாள் முன் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மேலும் படிக்க: இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் சூழும் அபாயமா? பிரதமர் மோடியின் ஆட்சியில் நடந்தது இதுதான்: அமெரிக்க உளவுத்துறை பகீர் ரிப்போர்ட்..!
அமெரிக்கா, மவுண்டானா மாகாணம், கஸ்ஹடி நகரில் உள்ள அந்நாட்டு விமானப்படை தளத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்த நிலையில், இதற்கு வட அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது.
விமானங்கள் பறக்கும் உயரத்துக்கு அதிகமாக 40 அடி உயரத்தில் இந்த பலூன் பறந்ததாகவும், அமெரிக்க அணு ஆயுத ஏவு தளத்தின் ரகசியத் தகவல்களை இந்த சீன ரகசிய உளவு பலூன் சேகரித்ததாகவும் அமெரிக்கா முன்னதாகக் குற்றம் சாட்டியது.
அதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் கரோலினா கடற்கரையிலிருந்து இந்த சீன பலூனை அமெரிக்க ராணும் சுட்டு வீழ்த்தியது. ஆனால் அமெரிக்கா சந்தேகித்ததுபோல் இது உளவு பலூன் அல்ல, ஆகாயக் கப்பல் என்றும், திசை மாறி வீசிய காற்றால் இந்த பலூன் அமெரிக்காவை அடைந்ததாகவும் சீனா விளக்கமளித்தது.
ஆனால், “இந்த உளவு பலூனை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். அளவில் மூன்று பேருந்துகளை ஒன்றாக இணைத்ததுபோல் இந்த உளவு பலூன் இருக்கிறது. அணு ஆயுத ஏவுதளத்தின் மீது பறக்கும் இதனால் எந்தத் தகவலும் பெறமுடியாத வகையில் பாதுகாப்பு வளையங்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன" என வட அமெரிக்க டிஃபன்ஸ் கமாண்ட் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: வைரல் வீடியோ.. 100 அடி கம்பத்தில் ஏற்றப்பட்ட மூவர்ண கொடி...விளையாட்டு மைதானத்தில் ஏற்றி நாட்டுக்கு அர்ப்பணித்த ராணுவம்..!