Gujarat Riot : குஜராத் மாநிலம் ஜூனாகத் பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


குஜராத்தில் பரபரப்பு


குஜராத் மாநிலம் ஜூனாகத் பகுதியில் ஒரு மசூதியை சுற்றி சுமார் 300க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் குதித்தனர். இதனை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தை கலைக்க முயன்றனர். அப்போது  போலீசாருக்கு போராட்டக்காரர்களுக்கும் இடையே பெரும் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் காவல்துறை அதிகாரிகள் மீது கற்களை வீசியும், அவர்களது வாகனங்களை சேதப்படுத்தியும் உள்ளனர்.  மேலும், அந்த காவல்நிலையத்தை சேதப்படுத்தினர். இதனால் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி பதிலடி கொடுத்தனர். 


இந்த தாக்குதலில் துணைக் காவல் கண்காணிப்பாளர் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக சுமார் 174 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


என்ன காரணம்?


குஜராம் மாநிலம்  ஜூனாகத் மாவட்டத்தில் மசூதி ஒன்று உள்ளது. இந்த மசூதி அரசு நிலத்தில் கட்டப்பட்டதாகவும், அதனை இடிப்பதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். அறிப்பு வெளியிட்டதில் இருந்தே இதற்கு கடும் எதிர்ப்பு இருந்தது. இதற்கான நோட்டீஸையும் அதிகாரிகள் மசூதி முன்பு ஒட்டினர்.  இந்த மசூதி சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளது என்று நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டிருந்தது.  மேலும், மசூதி சட்டப்படி கட்டப்பட்டது என்பதற்கான ஆதாரங்களை 5 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் மசூதி இடிக்கப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.  






இந்த அறிவிப்பு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நேற்று இரவு 9 மணியளவில் மசூதி முன்பு சுமார் 300க்கும் குவிந்து கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், "நேற்று இரவு 9 மணியளவில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலவரத்தில் ஈடுபட்டனர். அப்போது ரோந்து பணியில் இருந்த போலீசார் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நாங்களும் கண்ணீர் புகை குண்டுகளை வீச வேண்டியிருந்தது. இந்த கலவரத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 174 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  மசூதி இடிப்பது குறித்து மாநகராட்சி முடிவு செய்யும்”  என போலீசார் தெரிவித்தனர்.




மேலும் படிக்க 


Biparjoy Cyclone: பிபர்ஜாய் புயலின் ஆட்டம்.. வெள்ளக்காடாக மாறிய குஜராத்.. 1000 கிராமங்கள் இருளில் மூழ்கிய சோகம்..