சமீபத்தில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்தது. இதில் ஆளும் பாஜக இரண்டாவது முறையாக வெற்றிப்பெற்று ஆட்சியமைத்தது. யோகி ஆதித்யநாத் இரண்டாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையில் தற்போது சில அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அதன்படி, உத்தரப்பிரதேச மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அமைச்சர்கள் இனி ஓட்டல்களில் தங்கவும், உறவினர்களை தனிச் செயலாளர்களாக நியமிக்கவும் கூடாது என்று உபி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.


தன்னுடைய வீட்டில்  நடைபெற்ற கூட்டத்தில் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளார் யோகி, அதன்படி, அலுவலகங்களில் பணியை பாதிக்கும் நீண்ட மதிய உணவு இடைவேளை குறித்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடமிருந்து புகார்கள் வந்துள்ளதாக கூறினார். மதிய உணவு இடைவேளை 30 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அவர் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார். அதன்படி, "பொதுவாக அரசு அலுவலகங்களில் மதிய உணவு இடைவேளை மதியம் 1.30 மணி முதல் 2.00 மணி வரை இருக்கும். ஆனால், சிலர் மதிய உணவு இடைவேளையை எடுத்துக் கொண்டு அலுவலகங்களுக்கு தாமதமாக வருவதாகவும், அனைவரும் 30 நிமிட உணவு இடைவேளையை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது




ஐஐடி ட்ராப்-அவுட்தான்.. ஆனால் அத்தனை பேரும் கில்லாடி வெற்றியாளர்கள்.. யார் இந்த 5 பேர்?






இது தொடர்பாக அரசு அலுவலகங்களுக்கு சுற்றறிக்கையும் பறந்துள்ளது. இதுகுறித்து அரசு செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு அலுவலகங்களில் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் சரியான நேரத்தில் வர வேண்டும் என்றும், அலுவலகத்திற்கு தாமதமாக வருவது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றும் குறிப்பிட்டுள்ளார். அதேபோல, மூத்த அதிகாரிகள், அலுவலகங்களில் அவ்வப்போது திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும், அலட்சியம் காட்டும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


அதுமட்டுமின்றி பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் யோகி. எந்த கோப்பும் மூன்று நாட்களுக்கு மேல் நிலுவையில் இருக்கக்கூடாது எனவும், தாமதம் ஏற்பட்டால், பொறுப்பு சரி செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண