ஐஐடி பல முக்கியப் புள்ளிகளை உருவாக்கி இருக்கிறது.இந்தியாவின் பல முன்னனி முக்கியப் பிரமுகர்கள் ஐஐடியில் உருவானவர்கள். அதிலும் அங்கிருந்து பாதியிலேயே வெளியேறியவர்கள். அவர்களின் பட்டியல் இதோ...


முகேஷ் அம்பானி


இந்தியாவின் முன்னணிப் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் முகேஷ் அம்பானி. இவர் ஐஐடியில் படித்தவர் என்றால் அது அதிர்ச்சி அளிப்பதாக இருக்கும். ஆம், ஐஐடி-ஜேஇஇ தேர்வில் பங்கேற்று தேர்ச்சி அடைந்தவுடன் ஐஐடி பாம்பேயில் சேர்ந்தார். ஆனால் அவர் கெமிக்கல் இன்ஜினியரிங் தொடர விரும்பியதால் IIT-Bஐ விட்டு ICTல் சேர்ந்தார்.


பிரசாந்த் பூஷண்


உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியைப் பற்றி விமர்சன ட்வீட்களை ட்வீட் செய்ததற்காக அவர் செலுத்த வேண்டிய அபராதத்தின் காரணமாக பிரசாந்த் பூஷன் பிரபலமானார். அவர் ஆரம்பத்தில் ஐஐடி-மெட்ராஸில் தனது பட்டப்படிப்பைத் தொடங்கினார். ஆனால் ஒரு செமஸ்டருக்குப் பிறகு அங்கிருந்து வெளியேறினார். பின்னர் இரண்டு ஆண்டுகள் பிஎஸ்சி படிப்பைத் தொடர்ந்தார். அவர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் இந்தப் படிப்பைத் தொடர்ந்தார், அதன்பிறகு அந்தப் படிப்பையும் விட்டுவிட்டு அவர் தாயகம் திரும்பினார்.


அதன் பிறகு 1983 இல், அவர் தனது சட்டப் பணியைத் தொடங்கினார். இப்போது 500க்கும் மேற்பட்ட பொதுநல வழக்குகளைத் தொடர்ந்துள்ளார்.


வினோத் ராய்


ஐஐடியில் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், அந்த படிப்பிலேயே சேரவில்லை. மாறாக டெல்லி பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படித்து முதுகலைப் பட்டம் பெற்று தேர்ச்சி பெற்றார்


ஷாஷ்வத் நக்ரானி


2018ல், ஷஷ்வத், அஷ்னீர் குரோவருடன் இணைந்து பாரத்பே என்ற செயலியை நிறுவினார். 2015 ஆம் ஆண்டில் அவர் ஐஐடி டெல்லியில் சேர்க்கை பெற்றார், ஆனால் இந்த இறுதி ஆண்டில் அவர் வெளியேறினார். இப்போது ஐஐஎஃப்எல் வெல்த் ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்ற ஒரே இளைஞர் என்கிற பெருமைக்கு உரியவர்.






நாராயண மூர்த்தி


 இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி ஐஐடிக்கான ஜேஇஇ நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றார். நாராயண மூர்த்திக்கு தனது தந்தைக்கு கட்டணச்சுமை ஏற்படுத்தக் கூடாது என்கிற எண்ணம். அதனால் அவர் வேறு எதிலும் சேரவில்லை. அதனால் தேசிய பொறியியல் நிறுவனத்தில் பட்டப்படிப்பை முடித்தார். மேலும் தனது முதுகலைப் படிப்பிற்காக, அவர் ஐஐடி கான்பூர் சென்றார்.