கேரளாவில் 84 வயதான ஓமனா என்ற மூதாட்டியை அவரது மகன் ஓமனக் குட்டன் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். அப்போது தடுக்க வந்த தம்பியையும் கொடூரமாக தாக்கியுள்ளார். இந்த விடியோ காட்சிகள் வெளியாகி அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் சவற தெற்கு பகுதியைச் சேர்ந்த 84 வயது தாயை மகன் ஓமனகுட்டன் கொடூரமாக  தாக்கி, உடுத்தி இருந்த ஆடையை கிழித்து நிர்வாணமாக்கி, மீண்டும் மீண்டும் அடித்து உதைத்து தாக்குதல் நடத்தி உள்ளார். சித்திரவதை செய்யப்பட்ட இந்த காட்சிகள் விடியோ எடுக்கப்பட்டு ஐந்து நிமிடங்களுக்கு மேல் வெளியாகியுள்ளன. இந்த விடியோவில், தடுக்க வந்த சகோதரன் பாபுவையும் ஓமணக் குட்டன் அடிப்பது தெரிகிறது. மது போதையில் தாயிடம் பணம் கேட்டு, தாய் என்றும் பாராமல் தாறுமாறாக அடித்த இந்த கொடுமை காட்சிகள் பார்ப்போரை அதிர்ச்சி அடைய செய்கிறது. அவரது தாய் வலியில் அழுது கதறும்போதும் மேலும் மேலும் அடிப்பது நெஞ்சை பதைப்பதைக்க வைக்கிறது. அவர் அழும்போது அவரது முடியை பிடித்து இழுத்து அடிப்பது விடியோவில் பதிவாகி உள்ளது. 



ஓமனா அம்மாவிற்கு 4 பிள்ளைகள் உள்ளனர். அவற்றில் இரு மகன்களான பாபுவும், ஓமனக்குட்டனும் உடன் இருக்கின்றனர். அவர்கள் இருவருமே திருமணம் ஆனவர்கள் என்றபோதும், இருவரது மனைவி மக்கள் யாரும் உடன் இல்லை. தனியாக வாழ்கின்றனர். அக்கம்பக்கத்தினர் கூறுகையில் ஓமனக் குட்டன் எப்போதும் குடித்துவிட்டு வந்து தனது தாயை அடிப்பாரென்றும், தடுக்க செல்பவர்களை இரும்பு ராடை எடுத்து ஒரு முறை அடித்ததால் யாரும் தடுப்பதற்கு செல்வதில்லை என்றும் கூறுகின்றனர்.


இந்த  சம்பவத்தை பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு மாணவர் மொபைல் போனில் படம் பிடித்துள்ளார். அதனை சமூக வலைத்தளங்களில் படப்பியதும் வைரலாகி உள்ளது. தொடர்ந்து இது குறித்து அந்த பகுதி வார்டு உறுப்பினர்  இந்த வீடியோ ஆதாரங்களுடன்  போலீசில் புகார் செய்தார்.  அதனைத் தொடந்து தெக்கும் பாகம் போலீசார் ஓமனக் குட்டனை கைது செய்து விசாரணை நடத்தினர்.



இந்நிலையில், ஓமனா தான் கீழே விழுந்து காயம் அடைந்ததாக முதலில் போலீசாரிடம்  கூறினார். பின்னர் அந்த தாய் கூறுகையில்  “எதுவாக இருந்தாலும் அவன் என் மகன், என்னை பார்த்து கொள்வது அவனே” எனவும் கண்ணீர் விட்டு கூறியுள்ளார். ஆனால் மனித உரிமை கமிஷனின் இருந்து கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கு பதியப்பட்ட விசாரணை நடைபெற்று கொண்டிருக்கிறது. காவல்துறை வீடியோ காட்சிகளின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஓமனக்குட்டனிடம் சவற தெற்கு போலீசார் கஸ்டடியில் வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றன. மனித உரிமை கமிஷன் உறுப்பினர் வி கே பீனா குமாரி அந்த ஊர் சப் இன்ஸ்பெக்டரிடம் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தெரிவித்ததுடன் 15 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு கூறியுள்ளார்.