இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே அரசு முறை பயணமாக வரும் ஜூலை 21 ஆம் தேதி இந்தியாவிற்கு வருகை தருகிறார்.


இலங்கையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஏற்பட்ட கலவரத்தால அப்போதைய அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து ரணில் விக்ரமசிங்கே அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டார். இலங்கை அதிபராக ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்பட்ட பின் இந்தியாவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவே ஆகும். 2 நாள் பயணமாக இந்தியாவிற்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயணத்தின் போது பிரதமர் மோடியை சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த பயணம் தொடர்பாக அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்வதற்காக இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் வினய் மோகன் அடுத்த வாரம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார்.


மேலும் இந்த பயணத்தின் போது அதிபர் ரணில் விக்ரமசிங்கே, பிரதமர் மோடியை சந்தித்து பல்வேறு திட்டங்கள் தொடர்பாக ஒப்பந்தங்கள் போடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயணத்தின் போது இலங்கை அதிபருடன் மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி மற்றும் ஜனாதிபதியின் பணிப்பாளர் பிரதானி சாகல ரத்நாயக்க உள்ளிட்டோரும் பயணம் மேற்கொள்கின்றனர்.  இலங்கையின் திவாலான பொருளாதாரம் தற்போது முன்னேற்றம் கண்டுள்ள நிலையில், இந்த பயணம் மேற்கொள்ளப்படுகிறது.  இருப்பினும், பொருளாதார மீட்சி என்பது சவாலாகவே உள்ளது என்றும், தற்போது, ​​முன்னெப்போதையும் விட, அதிகாரிகள் மற்றும் இலங்கை மக்கள் ஆகிய இருவரின் வலுவான உரிமையின் கீழ் சீர்திருத்த வேகத்தைத் தொடர வேண்டியது அவசியம் என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் துணை நிர்வாக இயக்குனர் கென்ஜி ஒகாமுரா கூறியுள்ளார்.


இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வலிமிகுந்த பல பொருளாதார சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். கடந்த ஆண்டு ஏப்ரல் நடுப்பகுதியில் நாட்டில் பொருளாதார அவசர நிலை அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் IMF ல் இருந்து 2.9 பில்லியன் டாலர் பிணை எடுப்பு பெறப்பட்டது, இது சீர்திருத்தங்களுக்கு உட்பட்டு 4 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது.   


Jawan Trailer: தெறிக்கவிட்ட ஷாரூக்.. மிரட்டிய அட்லீ.. ரிலீசானது ஜவான் ட்ரெயிலர்..! நீங்களே பாருங்க..!


Actor Dhanush Case: நடிகர் தனுஷ் மீதான வழக்கு ரத்து - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!


Vegetables Price: நிலமையை பார்த்தால் சமைக்கவே முடியாது போல.. மீண்டும் உயர்ந்த தக்காளி விலை.. மற்ற காய்கறி விலை பட்டியல் இதோ..