இன்று  இரண்டாவது நாளாக பிரதமர் மோடி மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நடத்தப்படுகிறது. மேலும் இந்த விவாதங்களுக்கு பிரதமர் மோடி 10 ஆம் தேதி பதிலளிப்பார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்களவையில் இன்று நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “ நான் சில தினங்களுக்கு முன் மணிப்பூர் சென்று இருந்தேன். ஆனால் இன்று வரை நாட்டின் பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்லவில்லை. ஏனென்றால் அவருக்கு மணிப்பூர் இந்தியாவில் இல்லை. மணிப்பூரின் நிலை இன்று வரை சரி செய்யப்படவில்லை. மணிப்பூரை இரண்டாக பிளந்துள்ளனர். சுக்குநூறாக உடைத்துவிட்டனர். மணிப்பூரில் இருக்கும் நிவாரண முகாமிற்கு நான் சென்ற போது, அங்கு இருக்கும் பெண்களை, குழந்தைகளை சந்தித்து பேசினேன். அதனை இன்றுவரை பிரதமர் செய்யவில்லை. அதில் ஒரு பெண், தன் குழந்தையை தனது கண்முன்னே சுட்டுக்கொன்றதாக கூறினார். அவர் அனைத்தையும் இழந்து நிர்கதியாக நின்றார்.  இந்தியா அனைவருக்குமான வீடு, இந்தியா மக்கள் குரலை பிரதிபளிக்கும் நாடாக உள்ளது, ஆனால் அது தற்போது மிகப்பெரிய கேள்விக் குறியாக உள்ளது” என பேசினார். 


அதனை தொடர்ந்து ராகுல் காந்தி விவாதத்திற்கு பதில் உரை அளித்தார் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்மிருதி இரானி. அப்போது எதிர்க்கட்சிகள் தரப்பில் இந்தியா இந்தியா என கோஷங்கள் எழுப்பப்பட்டது. அப்போது பேசிய அவர்,   “நீங்கள் இந்தியா இல்லை, ஏனெனில் இந்தியாவில் ஊழல் இல்லை. உங்களைப் போன்றவர்கள் நன்கு தெரிந்துக்கொள்ள வேண்டும், ஆங்கிலேயர்களிடம் சொன்னதை நினைவில் கொள்ள வேண்டும். முதலில் ராகுல் காந்தி முன்வைத்த விவாதத்திற்கு கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். மணிப்பூர் நமது நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி. மணிப்பூர் ஒருபோதும் பிரிக்கப்படவில்லை. இனியும் இருக்காது. இன்றைய விவாதத்தில் மிகவும் மோசமான பேச்சை இங்கு கேட்டோம். இந்தியாவுக்கு ஊழலை அறிமுகம் செய்ததே காங்கிரஸ் தான். ஊழலை பற்றி பேசும் காங்கிரஸ் முதலில் அவர்கள் கூட்டணியில் இருக்கும் திமுகாவினரை பார்க்க வேண்டும். ஊழல், வாரிசு அரசியலுக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும். காஷ்மீர் பண்டிட்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக காங்கிரஸ் தரப்பில் என்ன செய்யப்பட்டது? அவர்களுக்கு எப்போது நியாயம் கிடைக்கும்? சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின் போது மக்களுக்கு  பெரும் கொடுமைகள் இழைக்கப்பட்டன” என மிகவும் ஆவேசமாக தனது பதிலுரையை பதிவு செய்தார்.


“உங்களுக்கு ராவணன் எவ்வளவோ பரவாயில்லை” - காரணத்தை சொல்லி மத்திய அரசை சாடிய ராகுல்காந்தி


Parliament: “பாஜகவினர் பயப்படாதீங்க; நான் பேசப்போவது இதைப்பற்றிதான்” - பதவி நீக்க ரத்துக்குப்பின் முதல்முறையாக பேசிய ராகுல்காந்தி!