ஒடிசாவில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பெண் ஒருவரை முதலை இழுத்துச் சென்று கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொடூர சம்பவம்:
சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். அதே நேரத்தில், அதிர்ச்சியூட்டும், அரிய சம்பவங்கள் தொடர்பான வீடியோக்களும், போட்டோக்களும் அனைவரையும் கவர்ந்துவிடும். அப்படி ஒரு சம்பவம் ஒடிசாவில் நடந்துள்ளது. ஒடிசா மாநிலம் ஜஜ்பூர் மாவட்டத்தில் பிருபா என்று அறு ஒடுகிறது. இந்த ஆற்றில் ஒரு பெண் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது, அந்த ஆற்றில் இருந்த ஒரு முதலை, திடீரென தலையை தூக்கி பார்த்து அந்த பெண்ணை தண்ணீருக்குள் இழுத்துச் சென்று கொன்றுவிட்டது.
கரையோரத்தில் பொதுமக்கள் நின்றுக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் அதிர்ச்சியில் நின்றுக் கொண்டிருந்தனர். அனைவருமே ஆற்றின் கரையிலேயே நின்றுக் கொண்டு கதறி துடித்துள்ளனர். மேலும், சிலர் இந்த கொடூர சம்பவத்தை வீடியோ எடுத்துக் கொண்டனர். இதனை அடுத்து, போலீசாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
மிஞ்சியது உடல் பாகம்:
இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் பெண்ணை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் முதலை கவ்வியப்போதே அந்த பெண் உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து, பெண்ணின் உடலை மீட்க தீயணைப்புத் துறையினர் முயற்சித்தனர். ஆனால் பெண்ணின் உடல் பாகம் மட்டுமே கிடைந்தது. பெண்ணின் கால்கள், தலை பகுதி கிடைக்கவில்லை என்று தெரிகிறது. இதனை அடுத்து, ஆற்றில் முதலைகள் நடமாட்டம் இருப்பதால், கவனமாக இருக்க வேண்டும் என மாவட்டம் நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த கொடூர சம்பவம் தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி இணையவாசிகளை கதிகலங்க வைத்துள்ளது. அதில், ஆற்றின் ஓரத்தில் நின்றுக் கொண்டிருந்த பெண்ணை கவ்வி இழுத்துள்ளது. பின்னர், முதலையின் தாடைகளுக்கு நடுவில் அந்த பெண் சிக்கிக் கொண்டிருக்கிறார். அந்த பெண்ணை வாயில் கவியப்படி வலது, இடது பக்கம் புரட்டிப்போட்டு நார் நாராக கிழித்தெறித்து பெண்ணை விழுங்கியுள்ளது. 35 வயதான அந்த பெண் ஜோத்ஸனா ராணி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும் படிக்க