Shocking Video: திருமண விழாவில் நடனமாடிக் கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென மேடையிலேயே சரிந்து விழுந்து உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மாரடைப்பு


நடனமாடும்போது, உடற்பயிற்சி, விளையாடும்போது மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் நாட்டின் பல்வேறு இடங்களில் நிகழ்ந்து வருகிறது.  உடலில் அனைத்து பாகங்களுக்கும் சுத்திகரிக்கப்பட்ட ரத்தத்தைக் கொண்டு செல்வது இதயத்தின் பணி. இப்படி ரத்தத்தை உடலுக்கு கொண்டு செல்லும் வேலையை ரத்த குழாய்கள் செய்கின்றன. இந்த ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்பு காரணமாக இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். அதனால் இதயத்தில் இருந்து உடலில் பிற பாகங்களுக்கு ரத்தத்துடன் செல்லும் ஆக்சிஜன் நிற்பதால் மாரடைப்பு ஏற்படுகிறது. 


சத்தீஸ்கரில் அதிர்ச்சி


சமீபத்தில் உடற்பயிற்சி, விளையாடும்போது என பல தருணங்களில் மாரடைப்பால் பலர் உயிரிழக்கின்றனர். இந்த சூழலில், தற்போது சத்தீஸ்கரில் ஒரு சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.  சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்டத்தில் உள்ள டோங்கர்கர் என்ற இடத்தில் திருமண நிகழ்ச்சியில் மேடையில் நடனமாடிக் கொண்டிருந்த ஒருவர் மாரடைப்பால் சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளார். இவர் பலோட் மாவட்டத்தைச் சேர்ந்த திலீப் ரௌஜ்கர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் மாநிலத்தில் உள்ள பிலாய் ஸ்டீல் ஆலையில் பொறியாளராகப் பணியாற்றியவர் என்பது தெரியவந்துள்ளது.


ஆடிக்கொண்டிருந்தபோதே மரணம்:


மேடையில் மிகவும் உற்சாகம் உடன் நடனமாடி கொண்டிருந்தார் தலீப்  ரௌஜ்கர். அப்போது திடீரென மேடையின் ஓரத்தில் அமர்ந்த அவர், அடுத்த சில வினாடிகளில் மேடையிலேயே சரிந்து விழுந்தார். இதனை தொடர்ந்து அவரை அங்கிருந்தவர்கள் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதற்கிடையில்  அந்த நபர் மேடையில் ஆடிக்கொண்டிருந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 






இது குறித்து மருத்துவர் கூறுகையில், ”நம் உடலில் சேரும் கொழுப்புகள் இதயத்திற்கு ரத்தம் செல்வதை தடுக்கிறது. இதனால் திடீரென மாரடைப்பு ஏற்படுகிறது. மக்கள் அடிக்கடி வழக்கமான உடல் பரிசோதனைக்கு செல்ல வேண்டும்” என்று மருத்துவமனை இயக்குநர்  தரேஷ் ராவ்தே கூறியுள்ளார். 




மேலும் படிக்க


Google BARD AI: இந்தியா உள்பட 180 நாடுகளில் அறிமுகமானது Google BARD AI..! அப்படி என்றால் என்ன?


TN Rain Alert: 11 மாவட்டங்களில் வெளுக்கப்போது கனமழை..? உங்கள் மாவட்டமும் லிஸ்டில் உள்ளதா? முழு விவரம்..!