மாதவிடாய் கால விடுப்பு வழங்குவதை கட்டாயமாக்குவது பணியிடங்களில் பெண்களுக்கான வாய்ப்பு குறைய வழிவகுக்கும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 


மாதவிடாய் கால விடுப்பு குறித்து உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இந்தியாவில் மாநிலங்களிலும் உள்ள மாணவிகளுக்கும் வேலிஅக்கு செல்லும் பெண்களுக்கும் மாதவிடாய் நாட்களில் விடுப்பு அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. 


இ உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கருத்துத் தெரிவித்துள்ளார். 


பணியிடங்களில், வேலை செய்யும் பெண்களுக்கு மாதவிடாய் கால விடுப்பு குறித்து தொடரப்பட்ட மனு விசாரணையின்போது, இது அரசின் கொள்கை முடிவு சாந்த விவகாரம்; நீதிமன்றம் இதில் தலையிட விரும்பவில்ல என்று தெரிவித்தார். அதோடு, மாதவிடாய் காலத்தில் வேலை செய்யும் பெண்களுக்கு விடுப்பு வழங்குவதை கட்டாயமாக்கினால் பணியிடங்களில் அவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 


மேலும், பெண்களை பாதுகாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் முடிவுகள் அவர்களுக்கு பாதகமாக அமைய வாய்ப்புள்ளது என்றும் கருத்து தெரிவித்துள்ளார். 


இது தொடர்பாக மனுதாரர் பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்தை நாடி கோரிக்கை வைக்கலாம் என்றும் உச்ச நீதிமன்ற அமர்வு அறிவுறுத்தியுள்ளது.