புகழ்பெற்ற டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணை வேந்தராக சாந்திஶ்ரீ துலிபுடி பண்டிட் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கெனவே புனே சாவித்திரிபாய் புலே பல்கலைக்கழக்கத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இதற்கு முன்பாக இருந்த துணை வேந்தரின் 5 ஆண்டு பதவிக்காலம் முடிந்த நிலையில் மதன் குமார் பொறுப்பு துணை வேந்தராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில் ஜேஎன்யூ பல்கலை கழகத்தின் துணை வேந்தராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார். 


59 வயதாகும் சாந்திஶ்ரீ துலிபுடி  ஜேஎன்யூ பல்கலைக் கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் படித்தவர். மேலும் சர்வதேச உறவுகள் தொடர்பான படிப்பில் இவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். அதன்பின்னர் 1993ஆம் ஆண்டு கோவா பல்கலை கழக்கத்தில் தன்னுடைய பேராசிரியர் பணியை தொடங்கியுள்ளார். அப்போது முதல் பல முக்கியமான பதவிகளில் இவர் இடம்பெற்றுள்ளார். குறிப்பாக யுஜிசியின் உறுப்பினர்களில் ஒருவராகவும் இவர் இருந்துள்ளார். 


 






இவருடைய பேராசிரியர் பதவி காலத்தில் தற்போது வரை 29 மாணவர்களுக்கு டாக்டர் பட்டம் பெற வழிகாட்டியுள்ளார்.  புகழ்பெற்ற டெல்லி ஜேஎன்யூ பல்கலைக் கழகத்தில் இதுவரை 12 துணை வேந்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் ஆண்களாக இருந்தனர். இந்தச் சூழலில் தற்போது ஜே.என்.யூ பல்கலைக் கழகத்தின் முதல் பெண் துணை வேந்தராக சாந்திஶ்ரீ துலிபுடி பண்டிட் நியமிக்கப்பட்டுள்ளார். 


இந்திய சுதந்திரம் அடைந்த பிறகு 1949ஆம் ஆண்டு பரோடா பல்கலைக் கழக்கத்திற்கு 1949ஆம் ஆண்டு ஹன்சா மேத்தா துணை வேந்தராக நியமிக்கப்பட்டார். அப்போது அவர் இந்தியாவின் முதல் பெண் துணை வேந்தராக பதவி ஏற்றார். அதற்கு பின்பு இந்தியாவில் தற்போது 54 மத்திய பல்கலைக் கழகங்கள் உள்ளன. அவற்றில் வேறும் 6 பல்கலைக் கழகங்களில் மட்டும் பெண் துணை வேந்தர்கள் உள்ளனர். அந்தப் பட்டியலில் ஜே.என்.யூ பல்கலைக் கழகமும் தற்போது இணைந்துள்ளது. தற்போது புகழ்பெற்ற ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்திற்கு நஜ்மா அக்தர் என்ற பெண் துணை வேந்தர் உள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண


மேலும் படிக்க: லதா மங்கேஷ்கரின் உடல் மீது ஷாரூக்கான் துப்பினாரா? பரவும் செய்தியும் உண்மை நிலையும்!