பிரபல திரைப்பட பிண்ணனி பாடகி லதா மங்கேஷ்கர்(92) உடல்நல குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். அவருடைய உடல் நேற்று மும்பை சிவாஜி பார்க் பகுதியில் தகனம் செய்யப்பட்டது. அவருடைய உடல் தகனம் செய்யப்படுவதற்கு முன்பாக பிரதமர் மோடி, பாலிவுட் நடிகர் ஷாரூக் கான் உள்ளிட்டவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். அப்போது அவர் லதா மங்கேஷ்கரின் உடல் முன்பாக துவா (பிரார்த்தனை) செய்தார்.


அந்த வீடியோவில் அவர் செய்த செயலை பலரும் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். மேலும் நடிகர் ஷாரூக் கான் லதா மங்கேஷ்கரின் உடல் முன்பாக ஊதியது எச்சில் துப்பியது போல் உள்ளது என்றும் சிலர் பதிவிட்டு வந்தனர். ஆனால் உண்மையில் நடந்தது என்ன? 


 






பாடகி லதா மங்கேஷ்கருக்கு அஞ்சலி செலுத்த வந்த ஷாரூக் கான் துவா (பிரார்த்தனை) செய்தார். அப்போது வழக்கமாக இஸ்லாமிய முறைப்படி குரான் வசனம் ஒன்றை கூறி அதை அவர்களுக்கு செல்லும் வகையில் ஊதுவது வழக்கம். அதை தான் ஷாரூக் கான் செய்திருந்தார். அதற்காக அவர் தன்னுடைய முகக்கவசத்தை எடுத்து ஊதியுள்ளார். இந்த வீடியோவை பதிவிட்டு சிலர் தவறாக கருத்து பதிவிட்டு வருகின்றனர். 


 






மேலும் ஒரு சிலர் ஷாரூக் கான் இஸ்லாமிய முறைப்படி தான் செய்தார் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த விஷயத்தை விவரம் தெரியாமல் ஒரு சிலர் விவாத பொருளாக மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: காஷ்மீர் சுதந்திரம்.. ஒரே ட்வீட்டால் சிக்கலில் சிக்கிய ஹூண்டாய்! உண்மை இதுதான் என விளக்கம்!