புஷ்பா பட பாணியில் வேனில் சீக்ரெட் ரூம் அமைத்து செம்மரக்கட்டைகள் கடத்திய சம்பவம் திருப்பதி அருகே அரங்கேறியுள்ளது.


சமீபத்தில் வெளியாகி இந்தியளவில் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை செய்த திரைப்படம்  ‘புஷ்பா’. செம்மரக்கடத்தலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன் செம்மரக் கடத்தல்காரராக நடித்திருப்பார். படத்தில் செம்மரக்கடத்தல் எப்படி எல்லாம் கடத்தப்படுகிறது என்பது காட்டப்படுகிறது. அதனைப் பார்த்த கடத்தல்காரர்கள் சிலர் புஷ்பா படத்தில் வருவதை போல் கடத்தலில் புதுப்புது யுக்திகளை பயன்படுத்தி வருகின்றனர்.




மேலும் படிக்க: Chennai: முகத்தில் கட்டப்பட்ட பாலிதீன்.. 3 சடலம்.. ரியல் எஸ்டேட் அதிபர் குடும்பத்துடன் தற்கொலை!




 


அந்த வகையில், சித்தூர் மாவட்டம் சந்திரகிரி அடுத்த மூலப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் திருப்பதி வனப்பகுதியில் இருந்து செம்மரக்கட்டைகளை கடத்த தனது சரக்கு வேனில் ரகசிய அறை அமைத்து, அதில் செம்மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு எவருக்கு சந்தேகம் வராமல் இருக்க அதற்கு மேல் தக்காளி டிரேக்களை வைத்து கடத்த முயற்சி செய்துள்ளார்.


இதுதொடர்பாக சந்திரகிரி போலீசாருக்கு யாரோ ஒருவர் ரகசிய தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் அடிப்படையில், போலீசார் மூலப்பள்ளி சுற்றுப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் வாகன சோதனையை தீவிரப்படுத்தினர். இந்த நிலையில், நேற்று மாலை வனப்பகுதியில் இருந்து ஒரு சரக்கு வேன் வருவதை பார்த்த போலீசார் அதனை நிறுத்த முயன்றனர். ஆனால், போலீசாரை பார்த்த ஓட்டுநர் வேகமாக வாகனத்தை ஓட்டி தப்பிக்க முயன்றார். உடனே, போலீசார் அந்த வேனை தூரத்திச் சென்றனர். சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை சேஸிங் நடந்த நிலையில், கடத்தல் வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள புதரில் புகுந்து விபத்துக்குள்ளானது. இதனைத்தொடர்ந்து, வாகனத்தை சோதனை செய்தபோது 14 செம்மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்ததை அடுத்து, அதனையும், வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


மேலும், கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞரை கைது செய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். புஷ்பா பட பாணியில் கடந்த சில தினங்களாக கடத்தல் சம்பவங்கள் நடைபெற்று வருவது போலீசாருக்கு அதிர்ச்சியையும், தலைவலியும் கொடுத்துள்ளது.


மேலும் படிக்க: Online crime: ஆன்லைனில் ஆபாச வீடியோ வெளியிட்ட கணவன், மனைவி.. சிக்கியது எப்படி?


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண