ராஜஸ்தானில் தற்போது காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்துவருகிறது. அண்மையில் அம்மாநிலத்தின் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அந்த மாற்றத்தின் மூலம் உதய்பூர்வதி சட்டப்பேரவைத் தொகுதி எம்.எல்.ஏ ராஜேந்திர சிங் குதா அமைச்சராகியுள்ளார். அவருக்கு, பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சி இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் சாலைகளின் நிலை குறித்து அங்கு குழுமியிருந்த மக்கள் புகார் அளித்தனர்.
அப்போது பொதுப்பணித்துறையின் தலைமை பொறியாளரை பார்த்த அவர், “எனது தொகுதியில் சாலைகள் நடிகை கத்ரினா கைஃப் கன்னங்களை போல இருக்க வேண்டும்” என கூறினார்.
அவர் இவ்வாறு பேசும் வீடியோ சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது. மேலும், அவரது இந்தப் பேச்சு சர்ச்சையையும் உருவாக்கியுள்ளது.
இதேபோல் முன்னதாக லாலு பிரசாத் யாதவ் கடந்த 2005ஆம் ஆண்டு ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். அவர் அப்போது பேசுகையில், “பிகாரின் சாலைகள் அனைத்தும் நடிகை ஹேமமாலினியின் கன்னங்களைப் போல் பளபளப்பாக இருக்கும்” என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த வரிசையில் ராஜேந்திர சிங்கும் இணைந்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Maanaadu Review : ’வந்தான், வென்றான், சிம்பு’ மாநாடு படம் எப்படி இருக்கு..?
20வது ஆண்டை நெருங்கும் சிம்பு: 11 ஆண்டுகளுக்குப் பின் வெற்றியை ருசித்த சோகம்.. எங்கே சறுக்கினார்?
Maanaadu Twitter Review: இது புரிஞ்சுக்குற டைம் லூப்.. எப்படி இருக்கு மாநாடு.. ட்விட்டர் ரிவ்யூ கலகலப்பு!