தென்மேற்கு பருவமழையை தொடர்ந்து வடகிழக்கு பருவமழையும் இந்தியாவில் ஒரு சில பகுதிகளில் மிகவும் தீவிரமாக தொடர்ந்து வருகிறது. இதன்காரணமாக பல்வேறு உணவு பொருட்களின் விலைச்சல் மற்றும் உற்பத்தி ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தப்படும் தக்காளியின் விலை மிகவும் உயர தொடங்கியுள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஒரு தக்காளியின் விலை 100 ரூபாய்க்கும் மேலாக அதிகரித்துள்ளது. 


குறிப்பாக சென்னையில் ஒரு கிலோ தக்காளியிவின் விலை 120 ரூபாய் முதல் 135 ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது. அதேபோல் டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற பெருநகரங்களிலும் தக்காளியின் விலை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தக்காளி விலை உயர்வை வைத்தும் வழக்கம் போல் பல மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. 


இது தொடர்பாக சிலர் உசைன் போல்ட் படத்தை பதிவிட்டு தக்காளி விலை பெட்ரோல் விலையைவிட வேகமாக முந்துகிறது என்று கூறியுள்ளனர். மற்ற சிலர் தக்காளி ஹீஸ்ட் என்று ஒன்று வர உள்ளது என்பது போல் பதிவிட்டு வருகின்றனர். மேலும் சிலர் தக்காளி விலை இப்படி உயர்ந்தால் நடுத்தர குடும்பங்களில் நிலை அவ்வளவு தான் என்று கூறி வருகின்றனர். 


 






 






 






 






 






 






 






 






இவ்வாறு பலரும் தக்காளி விலை உயர்வு தொடர்பாக மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர். 


மேலும் படிக்க: