Republic Day: குடியரசு தின விழா: கம்பீர அணிவகுப்பு, கண்கவர் கலைநிகழ்ச்சிகள் - எப்படி பார்ப்பது? டிக்கெட் வாங்குவது எப்படி?

Republic Day: இந்தியாவின் குடியரசு தின விழா வரும் 26-ந் தேதி டெல்லியில் கம்பீரமான கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட உள்ளது.

Continues below advertisement

1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந் தேதி இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தாலும், இந்திய தேசத்திற்கு குடியரசு அங்கீகாரம் 1950ம் ஆண்டு ஜனவரி 26ந் தேதியே கிடைத்தது. இதையடுத்து நாடு முழுவதும் வரும் 26-ந் தேதி குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

Continues below advertisement

எவ்வாறு பார்ப்பது?

இதையடுத்து, வரும் 26-ந் தேதி நாட்டின் குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பு மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது. டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்ற உள்ளார். பிரம்மாண்டமாக நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் முப்படைகளில் கம்பீரமான அணிவகுப்பும், கண்கவர் கலைநிகழ்ச்சிகளும் பல்வேறு மாநிலங்களின் ஊர்திகளும் நடைபெறும். இதை கண்டுகளிப்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள்.


இந்த நிலையில், டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவை நேரில் மட்டுமின்றி தொலைக்காட்சி வாயிலாகவும் கண்டுகளிக்கலாம். தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் குடியரசு தின நிகழ்ச்சிகள் நேரலை செய்யப்பட உள்ளது. இந்திய அரசின் இணையதள பக்கமான https://indianrdc.mod.gov.in/ என்ற இணையதளத்தில் சென்று இலவசமாக குடியரசு தின விழா நிகழ்ச்சிகளை கண்டு களிக்கலாம். மத்திய அரசின் அதிகாரப்பூர்வ செய்தி வழங்கும் தளமான பி.ஐ.பி.யிலும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

கம்பீர அணிவகுப்பு:

சாமானியர்களும் கண்டு களிக்கும் விதமாக மத்திய அரசு ஆமாந்த்ரன் என்ற தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த தளத்தில் குடியரசு தின நிகழ்ச்சியை நேரில் கண்டுகளிக்கலாம். குடியரசு தின விழாவில் பங்கேற்க நினைக்கும் பொதுமக்கள் தங்களுக்கான டிக்கெட்டுகளை அதற்கான பிரத்யேக இணையதளமான www.aamantran.mod.gov.in என்ற இணையதளத்தில் சென்றும் பெறலாம்.


நடப்பாண்டில் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவிற்கு சிறப்பு விருந்தினராக எகிப்து நாட்டின் அதிபர் அப்தெல் பட்டா எல் சிஸி அழைக்கப்பட்டுள்ளார். 2023ம் ஆண்டிற்கான குடியரசு தினத்திற்கான கருவாக பெண் சக்தி அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்பதற்கான டிக்கெட்டுகளை கீழ்க்கண்ட முறையில் பெற்றுக் கொள்ளலாம்.

டிக்கெட் பெறுவது எப்படி?

  • முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தின் உள்ளே செல்ல வேண்டும்.
  • செல்போன் மூலமாகவும் பதிவு செய்யலாம்.
  • பங்கேற்க உள்ள நிகழ்வின் விவரங்களை கேப்ட்சாவுடன் நிரப்ப வேண்டும்.
  • ஒரு முறை மட்டுமே வரும் கடவுச்சொல் மற்றும் செல்போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
  • அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்த பிறகு கட்டணத்தை செலுத்த வேண்டும்.
  • பின்பு இணையதளம் மூலமாக உங்களுடைய டிக்கெட் இமெயில் அல்லது எஸ்.எம்.எஸ். வாயிலாக அனுப்பப்படும்.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

மேலும் படிக்க: Sabarimala : சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்....இதுவரை இல்லாத அளவுக்கு உச்சம் தொட்ட வசூல்... எவ்வளவு தெரியுமா?

மேலும் படிக்க: RVM :புலம்பெயர்ந்த நபர்களும் வாக்களிக்க புதிய வசதியை அமல்படுத்த எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு; புதிய இயந்திர செயல் விளக்கம் கூட்டத்தில் பரபரப்பு! 

Continues below advertisement
Sponsored Links by Taboola