Republic Day 2022 LIVE: IAF அலங்கார ஊர்தியில் ஒரு பகுதியாக, இந்தியாவின் முதல் பெண் பைலட் பங்கேற்றார்
Republic Day 2022 LIVE Updates: நாட்டின் 73வது குடியரசு தின விழா கொண்டாட்டத்தின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் ஏபிபிநாடு லைவ் ப்ளாக் மூலமாக உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
கொடி ஏற்றிய பிறகு குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த், வீர தீரச் செயலுக்கான சவுரியா சக்ரா விருதுகளை டெல்லியில் வழங்கி வருகிறார். ஸ்ரீநகரில் 3 பயங்கரவாதிகளை கொன்று வீரமரணம் அடைந்த ஏஎஸ்ஐ பாபு ராமுக்கு அசோக் சக்ரா விருது வழங்கினார். இந்த விருதினை ஏஎஸ்ஐ பாபுவின் மனைவி ரினா ராணி, மகன் மாணிக் பெற்றுக்கொண்டனர்.
73 வது குடியரசு தினத்தையொட்டி டெல்லி ராஜபாதையில் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் தேசியக் கொடியேற்றினார்.
கரூர்,மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 73 வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இவ்விழாவில் காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். 62 பயனாளிகளுக்கு 48,57,970 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்துள்ள கரும்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருளர் இனத்தைச் சேர்ந்த மூதாட்டி கன்னியம்மாள் கைகளால் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. இவ்விழாவில் ஜாதி மத வேறுபாடின்றி கிராம மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
டெல்லி குடியரசு தின விழாவில் புறக்கணிக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் இடம்பெற்றுள்ளன. அணிவகுப்பு ஊர்திகளில் வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், பாரதியார்,வ.உ.சி, வீரபாண்டிய கட்டபொம்மன், வீரர் அழகு முத்துகோன் சிலைகள் இடம் பெற்றிந்தன. அதேபோல்,பெரியார், ராஜாஜி,காமராஜர்,பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உள்ளிட்டோரின் சிலைகளும் இருந்தது.
சென்னை, கோட்டையில் நடைபெற்று வரும் குடியரசு தின விழா அணிவகுப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காவல்துறையினர் உள்ளிட் வீரர்களுக்கு பதக்கங்களை வழங்கி கவுரவித்து வருகிறார்.
டெல்லி குடியரசு தின விழாவில் புறக்கணிக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் குடியரசு தின விழா அணிவகுப்பில் இடம்பெற்றுள்ளன.
சென்னை கோட்டையில் 73வது குடியரசு தின விழாவை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி கோட்டையில் கொடியேற்றினார். ஹெலிகாப்டரில் இருந்து வண்ணமலர்கள் தூவப்பட்டது.
Background
Republic Day 2022 LIVE Updates
நாடு முழுவதும் இன்று 73வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றுகிறார். முப்படைகளின் பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டிலும் குடியரசு தின விழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றுகிறார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -