ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ளது சிட்டோர்கர் மாவட்டம். இங்கு அமைந்துள்ளது பில்வாரா கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வருபவர் கிருஷண். இவருக்கும் மகேந்திர சென் என்பவருக்கும் கடந்த 12ம் தேதி திருமணம் நடைபெற்றது. இதற்கான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.


மேடயைிலேயே மணமகனுக்கு சரமாரி அடி:


திருமணத்திற்கான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கிராமத்தினர் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தியுள்ளனர். அப்போது, அதே மணமகள் கிருஷணனின் கிராமத்தைச் சேர்ந்த சங்கர்லால் பார்தி என்பவரும் மணமக்களுக்கு அன்பளிப்பு வழங்கினார்.


அன்பளிப்பு வழங்கிய அவர் மணமகன் மகேந்திரசென்னுக்கு கைகொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது, திடீரென மணமகன் மகேந்திர சென்னை சரமாரியாக முகத்திலே தாக்கினார். அப்போது, அவரிடம் கத்தியும் இருந்துள்ளது. மணமகனை திடீரென சங்கர்லால் பார்தி தாக்கியதில் மணமக்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் விழாவிற்கு வந்த அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டது.






பின்னர், மணமகனை தாக்கிய சங்கர்லால் பார்தி அந்த இடத்தில் இருந்து தப்பியோடினார். அவரைப் பிடிக்க உறவினர்கள் முயன்றபோது அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, மணமகளின் சகோதரர் விஷால் சைல் காவல்துறையில் புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.


காரணம் என்ன?


போலீசார் விசாரணையில் மணமகள் கிருஷணும், சங்கர்லால் பார்தியும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், சிறுவயது முதலே ஒன்றாக வளர்ந்தவர்கள் என்றும் தெரியவந்தது. மேலும், இருவரும் பள்ளி ஒன்றில் ஒன்றாகவே ஆசிரியர்களாக பணியாற்றியுள்ளனர். அப்போது, இருவரும் காதலித்ததாக கூறப்படுகிறது.


பின்னர், சந்தர்ப்ப சூழல் காரணமாக அவர்கள் பிரிந்துவிட்டனர். அதன்பிறகு, இருவருக்கும் இடையே அவ்வப்போது சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. பின்னர், கிருஷணுக்கு நிச்சயிக்கப்பட்ட மணமகன் மகேந்திர சென்னுக்கும் சங்கர்லால் பார்திக்கும் இந்த விவகாரம் தொடர்பாக மோதல் போக்கு நிலவி வந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில்தான்  காதலி கிருஷணனின் கணவன் மகேந்திர சென்னை சங்கர்லால் பார்தி சரமாரியாக தாக்கியுள்ளார் என்று போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.


இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். திருமண மேடையில் வைத்தே மணமகனை, மணமகளின் முன்னாள் காதலன் சரமாரியாக தாக்கிய விவகாரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க: கடல் கடந்த காதல்... கொரிய இளைஞரை கரம்பிடித்த கரூர் இளம்பெண் - தமிழ் முறைப்படி திருமணம்


மேலும் படிக்க: TN Headlines: 5 நாட்களுக்கு வெளுக்க போகும் மழை; டெங்கு எச்சரிக்கை விடுக்கும் அரசு: இதுவரை இன்று