Rain LIVE Updates: தொடரும் கனமழை.. சிம்லாவில் குடிநீர் தட்டுப்பாடு.. அவதியில் மக்கள்..

Rain LIVE Updates: பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியாவில் எந்த மாநிலத்தில் அதிக மழை மற்றும் மழை நிலவரம் தொடர்பான உடனடி தகவல்கள் ஏ.பி.பி நாடுவில் காணலாம்

ஆர்த்தி Last Updated: 11 Jul 2023 01:11 PM
தொடர் மழை.. வெள்ளக்காடாக மாறிய ஹரித்வார்.. மோசமாகும் நிலவரம்..

உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழை காரணமாக ஹரித்வாரில் பல பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.  





விடாத கனமழையால் சிம்லாவில் குடிநீர் தட்டுப்பாடு.. அவதியில் மக்கள்..

இமாச்சலப் பிரதேசம்: தொடர் மழையால் சிம்லாவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சிம்லா ஜல் பிரபந்தன் நிகாம் லிமிடெட் (SJPNL) மக்களுக்கு டேங்கர் லாரி மூலம் தண்ணீர் வழங்கி வருகிறது. 





தொடர் கனமழை.. யமுனை ஆற்றில் அதிகரிக்கும் நீர்.. நீரில் தத்தளிக்கும் மக்கள்..

பழைய யமுனா பாலம் அருகே உள்ள யமுனா பஜார் பகுதியில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளகி உள்ளனர். யமுனை ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் அப்பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.





கனமழையால் ஹரியானா பஞ்ச்குலாவில் மேம்பாலத்தில் ஒரு பகுதி அடித்துச் செல்லப்பட்ட காட்சிகல் இணையத்தில் வைரல்..

ஹரியானா: பஞ்ச்குலாவில் பெய்த கனமழையால் மேம்பாலத்தின் ஒரு பகுதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. சாலையில் பல இடங்களில் விரிசல்களும் காணப்பட்டன.






 

தொடர் கனமழையால் யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு.. கரையோர மக்கள் வேறு இடத்திற்கு மாற்றம்..

தொடர் கனமழை காரணமாக யமுனை ஆற்றில் நீரின் அளவு அபாய நிலையை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோரம் இருக்கும் மக்களை அங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்றும் பணிகள திவிரமாக நடைபெற்று வருகிறது. 

70 மணி நேரத்திற்கு மேலாக தொடரும் கனமழை.. வெள்ளக்காடாக மாறிய வட மாநிலங்கள்..

கடந்த சில தினங்களாக டெல்லி, ஹிமாச்சல பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட இடங்களில் தொடர் கனமழை பெய்து வருவதால் பல பகுதிகள் மழை நீரால் சூழப்பட்டுள்ளது. டெல்லியில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழை இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் ஹிமாச்சல பிரதேசம் மண்டியில் தொடர் மழை காரணமாக விக்டோரியா பாலம் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 





டெல்லியில் தொடரும் கனமழை.. உயர்நீதிமன்ற வளாகத்தில் நீர் கசிவு.. மாற்றப்பட்ட நீதிமன்ற அறை..

டெல்லியில் தொடர் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் நீர் கசிவு ஏற்பட்டுள்ளதால் ஒரு சில நீதிமன்ற அறைகள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக பார் அண்ட் பென்ச் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர் கனமழை.. மணலியில் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட பேருந்து..

மணலியில் பீஸ் நதி பகுதியில் தொடர் கனமழை காரணமாக பேருந்து ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 





யமுனா நதிக்கரையோரம் இருக்கும் மக்களை அப்புறப்படுத்தும் பணி தீவிரம் - அமைச்சர் சௌரப் பரத்வாஜ்

தொடர் கனமழை காரணமாக யமுனா நதியின் நீர் அதிகரித்து வருகிறது. 205 மீ. அளவை கடந்தால் யமுனா நதிக்கரையோரம் இருக்கும் மக்களை வேறு இடத்திற்கு மாற்றப்படுவார்கள் என அமைச்சர் சௌரப் பரத்வாஜ் தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து நிகழ்ச்சிகளை ரத்து செய்து, களத்தில் பணியாற்ற முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

மக்கள் வெளியே வர வேண்டாம்.. பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்க வேண்டும்.. ஹிமாச்சல் பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் அறிவுறுத்தல்..

தொடர் கனமழை காரணமாக மக்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு வெளிய வர வேண்டாம் என  ஹிமாச்சல் பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் அறிவுறுத்தியுள்ளார். மேலும் அவசர கால உதவி எண்ணும் (1100, 1070, 1077) மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

உத்தரகண்டில் பெய்து வரும் கனமழை.. 6 பேர் உயிரிழப்பு..

உத்திரகண்ட் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அப்பகுதிக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு இருக்கும் அனைத்து நதிகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். 

தொடர் கனமழை காரணமாக முதலமைச்சர் அர்விந்த் கெஜிர்வால் அவசர ஆலோசனை கூட்டம்..

டெல்லியில் தொடர் கனமழை காரணமாக, டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜிர்வால் இன்று மதியம் அவசர ஆலோசனை கூட்டம் நடத்துகிறார். இதில் அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் கலந்துக் கொள்கின்றனர். இந்த கூட்டத்தில் யமுனா நதியில் அதிகரிக்கும் நீரோட்டம் குறித்தும் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது. 

Background

41 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தலைநகர் டெல்லியில் 153 மி.மீ. மழை கொட்டித் தீர்த்துள்ளதால், ஒட்டுமொத்த டெல்லியும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. நிவாரண பணியில் ஈடுபடுவதற்காக, சுகாதார பணியாளர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் ஞாயிறு விடுமுறை கூட  ரத்து செய்யப்பட்டது.


மேல்திசை காற்றில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக டெல்லி உள்ளிட்ட வடமேற்கு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக மிக பலத்த மழை பெய்து வருகிறது.  நடப்பு மழைப்பருவத்தில் முதலாவது மிக பலத்த மழை இது பதிவாகியுள்ளது. இந்த கனமழையால் ஒட்டுமொத்த டெல்லி மாநகரமே வெள்ளக்காடாக மாறியுள்ளது. கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழையால் சாலைகள், தாழ்வன பகுதிகள் என திரும்பும் திசையெல்லாம் வெள்ளக்காடாகவே காட்சி அளிக்கிறது. மேலும், தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதால், மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதனால் தலைநகர் டெல்லியின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் அத்யாவசிய பொருட்களை வாங்க முழங்கால் அளவுக்கு மேல் தேங்கி நிற்கும் வெள்ள நீரில்தான் நடந்து செல்கின்றனர். வெளுத்து வாங்கும் மழையால் பலர் தங்களது வீட்டை இழந்துள்ளனர். டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வீடு இடிந்துவிட்டது எனவும், தங்களை மீட்க விரைவாக வாருங்கள் என கண்ணீருடன் டெல்லி தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுவரை சுமார் 20 வீடுகள் இடிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மீட்புப்பணியில் மும்முரமாக செயல்பட்டு வரும் தீயணைப்புத்துறை ஜாகிரா என்ற இடத்தில், ஒரு தகர கூடாரம் இடிந்து விழுந்ததில் சிக்கி தவித்த 2 பேரை பத்திரமாக மீட்டுள்ளது.


மழை அளவு - மஞ்சள் எச்சரிக்கை 


நேற்று முந்தினம் முதல் நேற்று அதாவது ஜூலை 9ஆம் தேதி காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 153 மி.மீ. மழை பெய்ததாக டெல்லி சப்தர்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் பதிவாகி உள்ளது.  இது கடந்த 41 ஆண்டுகளில் பெய்த அதிகபட்ச மழையாக பதிவாகியுள்ளது. இதற்கு முன்னர் கடந்த 1982-ம் ஆண்டு ஜூலை மாதம் ஒரே நாளில் 169 மி.மீ. மழை பெய்துள்ளது. அதேபோல், 1958-ம் ஆண்டு ஜூலை 21-ந் தேதி பெய்த 266 மி.மீ. மழைதான்  டெல்லியில் பதிவான அதிகபட்ச மழை ஆகும்.


அதன்பிறகு நேற்று பதிவான மழை அளவு, ஜூலை மாதங்களில் பதிவான 3-வது அதிகபட்ச மழை அளவாகியுள்ளது.  வானிலை ஆய்வு மையம், மஞ்சள் எச்சரிக்கை அறிவித்துள்ளது. தலைநகர் டெல்லி மட்டுமின்றி, காஷ்மீர், இமாசலபிரதேசம், அரியானா, ராஜஸ்தான் ஆகிய அண்டை மாநிலங்களுக்கும் இன்றுவரை மழை நீடிக்கும் என்று எச்சரித்துள்ளது. உத்ரகாண்ட் மாநிலத்துக்கு மட்டும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மேற்குறிப்பிட்ட மாநிலங்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.