ராகுல் காந்தியின் குரலை ஒடுக்குவதற்காக மத்திய அரசு பல்வேறு வழிமுறைகளை கண்டுப்பிடித்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி தெரிவித்துள்ளார்.மக்களவையிலிருந்து ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளதற்கு அதிருப்தி தெரிவித்துள்ளார்.


மக்களவையிலிருந்து ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளதற்கு தடை உத்தரவு பெறுவோம் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல், அரசியலமைப்புச் சட்டம் மீது முழு நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


மக்களவை பதவியிலிருந்த் ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசுகையில், “ராகுல் நாடாளுமன்றம் மற்றும் அரசியல் வாழ்க்கையில் அச்சமின்றி சரியான தனது கருத்துக்களைத் தெரிவித்து வருவது நாம் அறிந்ததே! அது ஏற்றுக்கொள்ள முடியாத மத்திய அரசு இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.” என்று தெரிவித்துள்ளார். 


பிரதமர் நரேந்திர மோடி குடும்ப பெயர் குறித்து ராகுல்காந்தி அவதூறாக பேசிய வழக்கில், அவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. வயநாடு தொகுதி எம்.பி.யாக இருந்த ராகுல்காந்தி மக்களவை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து, ராகுல்காந்தியை மக்களவை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்து மக்களவை செயலகம் அறிவிப்பை வெளியிட்டது. 


2019 மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் மோடி என்ற குடும்ப பெயர் பற்றி அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்தியை குற்றவாளி என அறிவித்து 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பின்னர் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அதோடு, ராகுல் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.


நாட்டில் அனைத்து விவகாரங்களிலும் ராகுல் காந்தி உண்மையை பேசினார். அவர் தொடர்ந்து உண்மையை பேசுவார். இவருடைய செயல்பாடுகளால் மத்திய அரசு அச்சமடைந்துள்ளது.  ராகுல்காந்தியில் குரலை ஒழுக்க மத்திய பாஜக அரசு புதிய வழிமுறைகளை கண்டுபிடித்துவருகிறது. நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பல்வேறு கருத்துக்களை தைரியமாக பேசியதற்கான விலையை ராகுல் காந்தி கொடுத்துள்ளார்.  இந்த விசயத்தில் அரசு சரியான வழிமுறைகளை பின்பற்றுகிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.




மேலும் வாசிக்க,


RahulGandhi: தகுதிநீக்கம் செய்யப்பட்ட ராகுல்காந்தி சிறைக்கு செல்வாரா? மாட்டாரா?


Watch Video: புஷ்பா பி.ஜி.எம்.முடன் என்ட்ரீ... ஃபயராக கம்பேக் தந்த வார்னர்... கெத்தா வரவேற்ற டெல்லி கேபிடல்ஸ்..!