ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணி கடந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்ட போதிலும் நூலிழையில் ப்ளே ஆப் சுற்றை தவறவிட்டது. கடந்த டிசம்பர் 31ம் தேதியன்று கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த பண்ட், சிகிச்சை பெற்று தற்போது குணமாகி வருகிறார். இதையடுத்து இந்த ஆண்டு பண்ட் விளையாட முடியாததால் அவருக்கு பதிலாக வார்னர் கேப்டனாக நியமிக்கப்பட்டார். 


டெல்லி கேப்டன் வார்னர்:


இந்தநிலையில், டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் மார்ச் 31ம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடருக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட டெல்லி அணிக்கு திரும்பினார். இதுகுறித்து, டெல்லி கேபிடல்ஸ் அணி டேவிர் வார்னரின் வருகை குறித்து தனது சமூக ஊடங்களில் பதிவிட்டது. அந்த வீடியோவில், டேவிட் வார்னர் புஷ்பாவின் பின்னணி பிஜிஎம் போட்டு அவரது வருகையை வரவேற்றது. அப்போது அந்த வீடியோவில் ”டெல்லி வந்துட்டேன்” என்று சொல்லிகொண்டே வார்னர் நடந்தார். 






இந்தநிலையில் Cricinfo உடனான உரையாடலில், டேவிட் வார்னரிடம் 10,000 டெஸ்ட் ரன்களை எடுக்க வேண்டுமா? அல்லது இன்ஸ்டா ரீல்ஸில் 10 மில்லியன் லைக்குகளைப் பெற வேண்டுமா? என்று கேட்கப்பட்டபோது, ​​வார்னர் தெளிவாக இன்ஸ்டா லைக்குகள்தான் என பதில் அளித்தார். இந்தக் கேள்வியுடன் மேலும் சில சுவாரஸ்யமான கேள்விகளும் டேவிட் வார்னரிடம் கேட்கப்பட்டன. இந்தக் கேள்விகளுக்கு வார்னர் என்ன பதில் சொன்னார் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்…



  • கேள்வி: ஹிந்திப் பாடலா அல்லது தெலுங்குப் பாடலா?
    பதில்: தெலுங்கு பாடல்கள்

  • கேள்வி: ரிஷப் பந்தின் ஒரு கை சிக்ஸரா அல்லது சூர்யகுமாரின் ஸ்கூப் ஷாட்டா?
    பதில்: சூர்யாவின் ஸ்கூப் ஷாட்

  • கேள்வி: மிட்செல் மார்ஷ் மற்றும் ரோவ்மேன் பவல் இடையேயான கை மல்யுத்தத்தில் யார் வெற்றி பெறுவார்கள்?
    பதில்: ரோவ்மேன் பவல்

  • கேள்வி: பிருத்வி ஷா அல்லது டேவிட் வார்னர் யார் டான்ஸ் நன்றாக ஆடுவார்கள்? 
    பதில்: நான்தான்

  • கேள்வி: பேட்ஸ்மேனாக ரிக்கி பாண்டிங் அல்லது பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங்?
    பதில்: பயிற்சியாளர்

  • கேள்வி: சுவிட்ச் ஹிட் லகானில் யார் சிறந்தவர்? மேக்ஸ்வெல் அல்லது வார்னர்
    பதில்கள்: மே பி நானாக இருக்கலாம்.

  • கேள்வி: டெஸ்டில் டிரிபிள் சதம் அடிப்பதா அல்லது ஐபிஎல்லில் ஆரஞ்சு தொப்பியை வெல்வது பிடிக்குமா?
    பதில்: 300 அடிக்க தான் விரும்புகிறேன்

  • கேள்வி: இந்தியாவிலா அல்லது இங்கிலாந்திலா எங்கு சதம் அடிப்பது கடினம்?
    பதில்: இந்தியாவில்.

  • கேள்வி: இங்கிலாந்தில் பிராட்டை எதிர்கொள்வது கடினமானதா அல்லது இந்தியாவில் அஷ்வினுக்கு எதிராக பேட்டிங் செய்வது கடினமா?
    பதில்: இங்கிலாந்தில் பிராட்

  • கேள்வி: இங்கிலாந்து அல்லது இந்தியா எங்கு டெஸ்ட் தொடரை வெல்வது எது கடினம்?
    பதில்: இந்தியாவில்.

  • கேள்வி: ODI உலகக் கோப்பை அல்லது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் எது வெல்ல விருப்பம்? 
    பதில்: ஒருநாள் உலகக் கோப்பை.

  • கேள்வி: ஜடேஜாவின் வாள் செலிஃப்ரேஷன் அல்லது வார்னரின் லீப் (தாவி கொண்டாடுவது) செலிஃப்ரேஷன்
    பதில்: இந்தியாவில் ஜடேஜாவின் வாள் மற்றும் ஆஸ்திரேலியாவில் தாவி கொண்டாடுவது.

  • கேள்வி:  டைவிங் கேட்ச் அல்லது டைரக்ட் ஹிட் எதை விரும்புகிறீர்கள்?
    பதில்: டைரக்ட் ஹிட்.

  • கேள்வி: சிக்ஸ் அடிப்பதில் லிவிங்ஸ்டன் அல்லது முறைத்துப் பார்ப்பதில் விராட் கோலி எதில் போட்டியிட விரும்புகிறீர்களா?
    பதில்: விராட்டுடன் முறைத்துப் போட்டியிடுவது விரும்புகிறேன்