Rahulgandhi: கடுங்குளிரிலும் வெறும் டி-ஷர்ட் மட்டும் அணிந்து நடைபயணம் செல்வது ஏன்..? மனம் திறந்த ராகுல் காந்தி...!
டெல்லி உள்பட வட மாநிலங்கள் முழுவதும் கடும் குளிர் வாட்டி வதைத்து வரும் நிலையிலும், ராகுல் காந்தி வெறும் டி-ஷர்ட் மற்றும் டிராக் அணிந்து நடைபயணம் செல்வது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

ராகுல்காந்தி நடைபயணம்:
காங்கிரஸ் கட்சியை மக்களிடம் மீண்டும் கொண்டு சேர்க்கும் வகையில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது.
Just In




இதில், பலத்தரப்பட்ட மக்களிடம் உரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார் ராகுல் காந்தி. தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட நடைபயணம் கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்களை கடந்து தற்போது டெல்லியை எட்டி உள்ளது.
டீ-சர்ட் மட்டும் அணிவது ஏன்..?
அப்போது, அண்ணல் காந்தியடிகள், முன்னாள் பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, லால் பகதூர் சாஸ்திரி, அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோரின் நினைவிடங்களில் ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார்.
டெல்லி உள்பட வட மாநிலங்கள் முழுவதும் கடும் குளிர் வாட்டி வதைத்து வரும் நிலையிலும், ராகுல் காந்தி வெறும் டி-ஷர்ட் மற்றும் டிராக் அணிந்து நடைபயணம் செல்வது அனைவரையும் வியக்க வைத்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் தட்பவெப்ப நிலை ஒற்றை இலக்கத்தில் பதிவாகி வருகிறது.
இதுதான் காரணம்:
இதுகுறித்து ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "எனக்கு குளிர் அடிக்கவில்லையா? என தொடர்ந்து கேட்கிறார்கள். ஆனால், அவர்கள் விவசாயி, தொழிலாளி, ஏழைக் குழந்தைகளிடம் இந்தக் கேள்வியைக் கேட்பதில்லை" என்றார்.
டெல்லி செங்கோட்டையில் மக்கள் மத்தியில் பேசிய அவர், "நான் 2,800 கிமீ நடந்திருக்கிறேன். ஆனால், அது பெரிய விஷயமல்ல என்று நான் நம்புகிறேன். விவசாயிகள் தினமும் எவ்வளவு நடக்கிறார்கள்; அதேபோல, விவசாயத் தொழிலாளர்கள், தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் இந்தியா முழுவதும் நடக்கிறார்கள்" என்றார்.
பாஜகவை விமர்சித்து பேசிய அவர், "கன்னியாகுமரியிலிருந்து பயணம் செய்து வருகிறேன். சாதாரண மக்களிடையே வெறுப்பு எதையும் காணவில்லை. அச்சத்தை மட்டுமே காண்கிறேன்.
நான் நடைபயணத்தை தொடங்கியபோது, எல்லா இடத்திலும் வெறுப்பு இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், அதை பார்க்கவே இல்லை. டிவி பார்க்கும் போது இந்து-முஸ்லிம் பிரச்னை இருக்கிறது. ஆனால், இந்திய மக்கள் அப்படி இல்லை" என்றார்.