ஆளுநர் என்பவர் மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்கு உட்பட்டவர் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 


பஞ்சாப் சட்டமன்றத்தை கூட்ட மறுப்பதாக அம்மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான நீதிபதி நரசிம்மா அடங்கிய அமர்வு ஆளுநரின் செயல்பாட்டுக்கு கருத்து தெரிவித்துள்ளது. அமைச்சரவை முடிவுப்படி ஆளுநர் சட்டமன்றத்தை கூட்ட வேண்டியது அவரது கடமை எனவும் ஆளுநர் கேட்கும் விவரங்களை தரவேண்டியது முதலமைச்சரின் கடமை எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 


அரசியலமைப்பு ரீதியான பதவியில் உள்ள முதல்வர், கடமையை செய்யவில்லை எனக்கூறி ஆளுநர் கடமையை தட்டிக்கழிக்க முடியாது என உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. முதலமைச்சர் விவரங்களை தரவில்லை எனக்கூறி அமைச்சரவை முடிவை செயல்படுத்தாமல் இருக்க முடியாது எனவும் அரசியல் சட்ட ரீதியான பதவியில் இருக்கும் பண்பட்ட தலைவர்களால் இக்கட்டான சூழ்நிலைகள் ஏற்படாது என நம்புவதாகவும் தெரிவித்துள்ளது. 


மேலும்  “ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடு இருக்கத்தான் செய்யும். அதை பண்பட்ட முறையில் தீர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு மாநிலத்தின் அமைச்சரவை எடுக்கும் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்தான்” என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.


மேலும், இரு தரப்பினரும் தங்களது கடமையை சரிவர செய்யவில்லை என்று நீதிபதி நரசிம்மா தெரிவித்துள்ளார். 




மேலும் வாசிக்க.. 


Chandrayaan-3 : சந்திரயான்-3 இரண்டாம்கட்ட சோதனை- கிரையோஜெனிக் எஞ்சின் சோதனை வெற்றி - இஸ்ரோ தகவல்!


CBSE Paper Leak: 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு வினாத்தாள் கசிந்ததா?- சிபிஎஸ்இ கடும் எச்சரிக்கை