நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் - 3 திட்டம் உருவாக்கப்பட்டது. அதன்படி, இந்தாண்டுக்குள் சந்திரயான் - 3 ஏவுகணை விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்திருந்தது. சந்திரயான் -3 ஏவுகணையின் இரண்டாம் கட்டம் சோதனை வெற்றிகரமாக செய்யப்பட்டதாக அறிவித்துள்ளது. 


சந்திரயான் -3 ஏவுகணையின் பொருத்தப்பட உள்ள சி.இ.20 க்ரையோஜெனிக் எஞ்சினின் சோதனை நேற்றிரவு வெற்றிகரமாக நடத்தப்பட்டடடதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகேந்திரகிரியின் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து இச்சோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சந்திரயான்-3 முதற்கட்ட சோதனை 


இந்தியாவின் நிலவு பயணத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில், பெங்களூருவில் உள்ள யு ஆர் ராவ் செயற்கைக்கோள் மையத்தில் சந்திரயான்-3 சோதனை ஓட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது.  இந்த சோதனை ஜனவரி 31 முதல் பிப்ரவரி 2 வரை நடத்தப்பட்டதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நேற்று அறிவித்தது.


EMI-EMC சோதனையானது, விண்வெளி சூழலில் செயற்கைக்கோள் துணை அமைப்புகளின் செயல்பாடு மற்றும் எதிர்பார்க்கப்படும் மின்காந்த நிலைகளுடன் அவற்றின் இணக்கத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக நடத்தப்படுகிறது. இந்தச் சோதனையானது செயற்கைக்கோள்களை செயல்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல் என்று இஸ்ரோ அறிக்கையில் தெரிவித்துள்ளது. சந்திரயான்-3 இன்டர்பிளானட்டரி மிஷன் மூன்று முக்கிய பகுதிகளை கொண்டுள்ளது: propulsion, லேண்டர் மற்றும் ரோவர். புரபுல்சன் பகுதி, லேண்டர் பகுதி, ரோவர் பகுதியாகும். அதாவது புரபுல்சன்பகுதி விண்கலத்தில் உள்ள ரோவர், லேண்டர் பகுதியை நிலவில் 100 கி.மீ பகுதிக்கு கொண்டு செல்லும். லேண்டர் பகுதி நிலவில் தரையிறங்கும் பகுதியும், ரோவர் பகுதி, நிலவில் ஆய்வு செய்யும் கருவியாகும். இந்த 3 பகுதிகளுக்கும் இடையே ரேடியோ- அலைவரிசையும் பரிசோதிக்கப்பட்டுள்ளது.


சந்திரயான் - 3 (Chandrayaan-3) 




நிலவில் தண்ணீர் இருப்பதை உறக்கச் சொன்னது சந்திராயன் விண்கலம். நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான்-2 விண்கலம் 2019 ஜூலை 22-ல் ஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்டது. ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக செப்டம்பர்,7-ஆம் தேதி சந்திரயான் விண்கலத்தின் லேண்டர் கலன் திட்டமிட்டபடி நிலவில் தரையிறங்கவில்லை.


இந்நிலையில், சந்திரயான் - 3 திட்டம் சந்திராயன் -2- மிஷனின் ரிப்பீட் என்று கூறப்பட்டுள்ளது. சந்திரயான் - 3 விண்கலத்தில் ஆர்பிட்டர் இருக்காது. சந்திராயன் - 3 இம்மாதம் விண்ணில் ஏவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தெரிந்து கொள்க!



  • ஆர்பிட்டர் என்பது விண்வெளியில் உள்ள  கோள்களைச் சுற்றி வந்துகொண்டே ஆய்வு செய்யும்.

  • லேண்டர்- உதாரணத்திற்கு நிலவில் பத்திரமாக தரையிறங்கி தன் ஆய்வை மேற்கொள்ளும்.

  • ரோவர்- இது ஆய்வு செய்யப்பட வேண்டிய கோள்/ கிரகத்தில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சென்று ஆய்வு செய்யும் திறன் கொண்டது.


 இந்த வெளிநாட்டு செயற்கைக்கோள்களை ஏவுவதன் மூலம் உருவாக்கப்பட்ட அந்நிய செலாவணி தோராயமாக 94 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மற்றும் 46 மில்லியன் யூரோக்கள் ஆகும் என்றார்.


ஜனவரி 2018 முதல் நவம்பர் 2022 வரை, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, பின்லாந்து, பிரான்ஸ், இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான், லக்சம்பர்க், மலேசியா, நெதர்லாந்து, கொரியா குடியரசு, சிங்கப்பூர், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, யுனைடெட் கிங்டம் மற்றும் அமெரிக்கா  போன்ற நாடுகளைச் சேர்ந்த 177 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.  பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி-மார்க் -III ஏவுகணைகள் மூலம் வணிக ஒப்பந்தத்தின் கீழ் இவை விண்ணில் செலுத்தப்பட்டது.